பத்திரிகை நிருபர்கள் மீது திமுக தொண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்- மன்னிப்பு கோரியது திமுக தலைமை..

DMK Cadres : Journalists Attacked by DMK Cadres infront of DMK treasurer M K Stalin பத்திரிகை நிருபர்கள் மீது திமுக தொண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்- மன்னிப்பு கோரியது திமுக தலைமை.. பத்திரிகை நிருபர்கள் திமுக தொண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு திமுக சார்பாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திமுக அமைப்புச்செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியதையடுத்து, அவரது ஆதரவாளர்களும், திமுக தொண்டர்களும் அவரது வீட்டில் குவிந்திருந்தனர். அப்பொழுது பத்திரிகை நிருபர்கள் சிலர் மூ க ஸ்டாலின் மீது தவறான விமர்சனம் வைத்ததாக நினைத்துக்கொண்டு, திமுகவினர் சிலர் அவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி திமுக அறிக்கையில் அங்கே கூடியிருந்த கூட்டத்தினருடன் தீய சக்திகள் சில ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்கலாம். ஆயினும், பத்திரிகை நிருபர்கள் மீது நடைபெற்ற…

Read More

இந்தியாவுக்கு வளம் சேர்க்கும் சேது சமுத்திர திட்டம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

DMK Treasurer MK Stalin Speech in Dindukal about Sethu Canal திண்டுக்கல், ஜூலை. 24- தேனி மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் தேர்தல் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் நேற்று இரவு நடந்தது. இக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேர்தல் நிதியை பெற்றுக்கொண்டார். அவரிடம் தேனி மாவட்ட தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியாக ரூ. 1 கோடியே 1 லட்சத்தை மாவட்ட செயலாளர் எல்.மூக்கையா வழங்கினார். கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது, தென் மாவட்டங்களில் நடத்தப்பட்ட நிதியளிப்பு கூட்டங்களில் இங்குதான் அதிக கூட்டத்தை பார்க்கிறேன். நிதி வழங்கிய தொகையின் மதிப்பில் திண்டுக்கல் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. பிற மாவட்டங்களை காட்டிலும் தேனியில் நிதி குறைவாக கொடுத்து இருந்தாலும் இங்கு வந்திருக்கும் மக்களின் எழுச்சியில்…

Read More

மாநிலங்களவை தேர்தல் அதிமுக திமுக வெற்றி

admk dmk won the Rajya Sabha election மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்   தேர்தல் நேற்று(27.6.13) 9மணியளவில் நடந்தது இதில்  அ தி மு க வேட்ப்பாளர்கள் நான்கு பேரும் அதிமுக ஆதரவோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவரும் திமுக வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர் தேமுதிக தோல்வியை தழுவியது, வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை சட்டப் பேரவைச் செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான ஏ.எம்.பி.ஜமாலுதீன் வழங்கினார். வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 234 வாக்குகளில் 231 வாக்குகள் பதிவாயின. தேர்தலை பாமக புறக்கணித்ததால் 3 வாக்குகள் பதிவாகவில்லை. ஒரு வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப் பேரவை குழுக் கூட்ட அறையில் வியாழக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கியது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் பார்வையாளராக இருந்து தேர்தலை நடத்தினார்.…

Read More

சேது திட்டத்தை நிறைவேற்ற போராட்டம் : கருணாநிதி

sethusamudram shipping canal project karunanidhi birthday மத்திய, மாநில அரசுகள் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தங்களது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போராட்டம் நடத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., திடலில் கருணாநிதியின் 90-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் (3 ஜூன்  2013) திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்துக்கு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் கருணாநிதி பேசியது:-  திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம் கட்டப்பட்டன. ஆயிரங்கால் மண்டபத்தை பூதங்கள் கட்டின என்பதுபோல தலைமைச் செயலகத்தை சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதல்வர் (கருணாநிதி) வரை பார்த்து பார்த்து கட்டினோம். அதை மருத்துவமனையாக அறிவித்து, வேகவேகமாகப் பணிகள் நடைபெற்று, தற்போது பாழடைந்து கிடக்கிறது.…

Read More