DMK Cadres : Journalists Attacked by DMK Cadres infront of DMK treasurer M K Stalin
பத்திரிகை நிருபர்கள் மீது திமுக தொண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்- மன்னிப்பு கோரியது திமுக தலைமை..
பத்திரிகை நிருபர்கள் திமுக தொண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு திமுக சார்பாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக திமுக அமைப்புச்செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியதையடுத்து, அவரது ஆதரவாளர்களும், திமுக தொண்டர்களும் அவரது வீட்டில் குவிந்திருந்தனர். அப்பொழுது பத்திரிகை நிருபர்கள் சிலர் மூ க ஸ்டாலின் மீது தவறான விமர்சனம் வைத்ததாக நினைத்துக்கொண்டு, திமுகவினர் சிலர் அவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி திமுக அறிக்கையில் அங்கே கூடியிருந்த கூட்டத்தினருடன் தீய சக்திகள் சில ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்கலாம். ஆயினும், பத்திரிகை நிருபர்கள் மீது நடைபெற்ற தாக்குதலுக்காக திமுக அமைப்புச் செயலாளர் என்ற முறையில் தன்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
பத்திரிகை நிருபர்கள் குழுமியிருந்த இடத்தில் கூடியிருந்த திமுகவினருடன் தீய சக்திகள் ஊடுறுவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்திருக்கலாம் என திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு விளக்கம் அளித்துள்ள இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்டுக் கைதான 11 பேருமே தீவிர திமுக தொண்டர்கள் என தெரிய வந்துள்ளது. எல்லோருமே கட்சிப் பொறுப்புகளில் உள்ளவர்கள். குறிப்பாக எல்லோருமே தி மு க இளைஞர் அணியைச்சார்ந்தவர்கள். தி மு க இளைஞர் அணி மு.க.ஸ்டாலின் வசம்தான் இருக்கிறது. இவர்களில் 7 பேர் பகுதி செயலாளர்களாக உள்ளவர்கள், ஏனையோர் சாதாரண கட்சி உறுபினர்கள்.
இதையடுத்து, காவல்துறையினர் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய 11 தி.மு.க.வினரை கைது செய்தனர்.
- பூந்தமல்லி காட்டுப்பாக்கம் திமுக இளைஞரணி செயலாளர் முரளி,
- ஆயிரம்விளக்கு பகுதி 111 வது வட்ட இளைஞரணி செயலாளர் அருள்தாஸ்,
- ஆயிரம்விளக்கு பகுதி இளைஞரணி செயலாளர் கமலக்கண்ணன்
- திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் பகுதி திமுக இளைஞரணி செயலாளர் ஜெய்பிரகாஷ்
- ஆயிரம்விளக்கு முன்னாள் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில் குமார்
- திமுக உறுப்பினர் தேவக்குமார்
- திமுக உறுப்பினர் முருகன்
- திமுக உறுப்பினர் அசோக்
- திமுக உறுப்பினர் ராஜேஷ்
- திநகர் 117வது வட்ட இளைஞரணி செயலாளர் வின்சென்ட் பாபு
- திநகர் 119 வது வட்ட இளைஞரணி செயலாளர் விநாயக மூர்த்தி
இவர்கள் 18 வது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 2ம் தேதிவரை நீதிமன்ற காவலில் புழல்சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
English Summary : Journalists Attacked by DMK Cadres infront of DMK treasurer M K Stalin. 3 News reporters, including one from a leading newspaper, were attacked by DMK cadres who blamed the media for their party’s failure in the Lok Sabha elections. This happened in front of the house of DMK’s treasurer Stalin. The 50 attackers damaged cameras and equipment. Journalists in Chennai are shocked over the attack by ‘bad elements belong to DMK’ infront of DMK treasurer M K Stalin. Expressing regret over the attack on the Journalists persons, DMK organizing secretary T.K.S. Elangovan said the DMK cadres “could have misunderstood the comments of media People” and attacked them. He also said miscreants present at the spot could have tried to create mischief during that incident.
Journalists Attacked by DMK Cadres infront of DMK treasurer M K Stalin
Best Building Contractors in Chennai to Build your Dream Home or Factory : Bestsquarefeet.com