இந்தியாவுக்கு வளம் சேர்க்கும் சேது சமுத்திர திட்டம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

DMK Treasurer MK Stalin Speech in Dindukal about Sethu Canal திண்டுக்கல், ஜூலை. 24- தேனி மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் தேர்தல் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் நேற்று இரவு நடந்தது. இக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேர்தல் நிதியை பெற்றுக்கொண்டார். அவரிடம் தேனி மாவட்ட தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியாக ரூ. 1 கோடியே 1 லட்சத்தை மாவட்ட செயலாளர் எல்.மூக்கையா வழங்கினார். கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது, தென் மாவட்டங்களில் நடத்தப்பட்ட நிதியளிப்பு கூட்டங்களில் இங்குதான் அதிக கூட்டத்தை பார்க்கிறேன். நிதி வழங்கிய தொகையின் மதிப்பில் திண்டுக்கல் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. பிற மாவட்டங்களை காட்டிலும் தேனியில் நிதி குறைவாக கொடுத்து இருந்தாலும் இங்கு வந்திருக்கும் மக்களின் எழுச்சியில்…

Read More

கனிமொழி மாநிலங்களவை வேட்பாளர்?? திமுக அவசர கூட்டம்..

Kanimozhi the Rajyasabha Candidate of DMK 13 ஜூன் 2013 : சென்னை : திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் மாநிலங்களவைத் தேர்தல் குறித்து  முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் கருணாநிதியின் மகள் கனிமொழியை மீண்டும் போட்டியிட வைக்க முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றுவருகிறது.  இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்திற்குப் பிறகு மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக போட்டியிடும் பட்சத்தில் கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 23 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள திராவிட முன்னேற்ற கழகம், 10 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெற முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Kanimozhi the Rajyasabha Candidate of DMK

Read More