Kanimozhi the Rajyasabha Candidate of DMK 13 ஜூன் 2013 : சென்னை : திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் மாநிலங்களவைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் கருணாநிதியின் மகள் கனிமொழியை மீண்டும் போட்டியிட வைக்க முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்திற்குப் பிறகு மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக போட்டியிடும் பட்சத்தில் கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 23 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள திராவிட முன்னேற்ற கழகம், 10 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெற முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Kanimozhi the Rajyasabha Candidate of DMK
Read MoreYou are here
- Home
- indian election