சமையல் வாயு மானியம் வங்கி கணக்கில் டெபாசிட் அக்டோபர் 1 முதல் அமல்

புதுடில்லி: 2013அக்டோபர் 1ம் தேதி முதல், சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம், நாடு முழுவதும், 14 கோடி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். நாடு முழுவதும், 14 கோடி பேர், சமையல் வாயு இணைப்பு வைத்துள்ளனர். அவர்களுக்கு, சமையல் வாயு  சிலிண்டருக்கான மானியம், ஆண்டுக்கு, 4,000 ரூபாய், அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும். அடுத்த மாதம், 15ம் தேதி, 20 மாவட்டங்களில், சமையல் வாயு  சிலிண்டர் மானியம், பயனாளிகளின் வங்கிக் கணக்கில், வரவு வைக்கப்பட உள்ளது. அதையடுத்து, படிப்படியாக, பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன. மொத்தமாக வழங்கப்படுமா? மாதந்தோறும் வழங்கப்படுமா? எந்த தேதியில் வரவு வைக்கப்படும், போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம்

Property sale in Chennai Annanagar

Property sale in Chennai Annanagar
Click here to contact us…

 

Related posts