இது குறித்த தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: 25க்கு மேற்பட்ட வேளாண் சார்ந்த தொழில்களுக்கு கரும்பு, மூலப் பொருளாக இருக்கிறது. காகிதம், சர்க்கரை, வெல்லம், கால்நடை தீவனம், மின்சாரம், ஆகியவை கரும்பிலிருந்து உற்பத்தி செய்ய படுகின்றன.
கரும்பு உற்பத்தித் திறனை அதிகபடுத்துவதனாலும், செலவுகளை குறைப்பதனாலும் கரும்பு விவசாயிகள் அதிக லாபம் அடைய முடியும் என்பதை மையமாக கொண்டு, ‘நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம்” என்ற புதிய திட்டத்தினை செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார்.
ஆக, இந்த 2013ல் 7500 ஏக்கர் பரபளவில் நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தினை செயல் படுத்த கட்டளையிட்டு ரூ.12கோடியே 93 லட்ச ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தின் கீழ் துல்லிய பாசன முறை மற்றும் நிழல் வலை நாற்றங்கால்களை உருவாக்க தேவையான தொழில் நுட்பம், ஆகியன பற்றி தமிழக விவசாயிகளுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் குறைந்த அளவு விதை நாற்றுக்களையும், குறைந்த அளவு தண்ணீரையும் உபயோகித்து சரியான அளவு ஊட்டச் சத்தயும் பயிர் பராமரிப்பின் மூலமமும் அதிக மகசூல் பெறலாம். மேலும், விதைக் கரும்பு மற்றும் தண்ணீர் தேவை பெருமளவில் குறையும்.
Tamilnadu Sugarcane Agriculture
Residential property buying and selling in chennai