கர்நாடக அரசியலில் குத்து ரம்யா என்கின்ற திவ்ய ஸ்பந்தனா

kuthu ramya entering karnataka politics

நடிகர் நடிகைகள் அரசியல் நுழைவு இந்தியவில் தொடர்ந்து வரும் வரலாறு ஆகும் இந்த வரிசையில் இணையும் அடுத்த பிரபலம் நடிகை திவ்ய ஸ்பந்தனா என்கின்ற குத்து ரம்யா. கர்நாடகத்தின் மாண்டியா எம்.பி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரபல நடிகை திவ்ய ஸ்பந்தனா போட்டியிட உள்ளார். பிரபல கன்னட நடிகையான திவ்ய ஸ்பந்தனா, இவர் கர்நாடக முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணாவின் பேத்தியாவர்.இந்நிலையில் இவர் மாண்டியா எம்.பி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் புறநகர் தொகுதி எம்.பி.யாக இருந்த குமாரசாமியும், மாண்டியா எம்.பி.யாக இருந்த சலுவரய்யாசாமியும் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு, கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர். இதனால் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வரும் 21 ஆம் திகதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. நடிகை ரம்யா பெயரை முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் கட்சி மேலிடத்துக்கு சிபாரிசு செய்தனர். இதை பரிசீலித்த மேலிடம் அவரை வேட்பாளராக இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

kuthu ramya entering karnataka politics

actress divya spandana enter to the  politics

English Summary: ‘Kuthu’ Ramya alias Divya Spandana is now not only an actress but also a politician. After joining the Congress Party some time back, she decided to dedicate and serve her country in any possible way. She commented,that  “I am keenly learning politics. I will stand by the ideologies and policies of the party. The State (Karnataka) should witness a big change”

Related posts