வேஷ்டியால் ரயில் பயணம் ரத்து இந்தியருக்கு துபாயில் அவமானம்

Indian wearing dhoti not allowed on Dubai metro

துபாயில் வேஷ்டி அணிந்து சென்ற இந்தியருக்கு அந்நாட்டு மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து அவரது மகள், அந்நாட்டு நீதிமன்றத்தில், ரயில் நிலைய அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தியாவை சேர்ந்த மதுமதி. துபாயில் வசித்து வருகிறார். இவரை காண, மதுமதியின் தந்தை அடிக்கடி துபாய் செல்வது வழக்கம். இந்நிலையில், 67 வயதான மதுமதியின் தந்தை நேற்று துபாயில் உள்ள எதிசலாத் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வேஷ்டி அணிந்து சென்றார். ரயில் நிலைய அதிகாரிகள், அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், அவருடன் சென்ற மதுமதி அதிர்ச்சி அடைந்தார். தந்தையை தடுப்பதற்கான காரணம் கேட்டபோது, அவர் வேஷ்டி அணிந்திருப்பதால் ரயிலில் பயணிக்க அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், வேஷ்டி, இந்தியர்களின் பாரம்பரிய உடை என்றும் சுற்றுலா பயணிகளுக்கு துபாயில் உடை கட்டுப்பாடு இல்லை என்றும் மதுமதி அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார். மதுமதியின் பேச்சை சற்றும் மதிக்காத ரயில் நிலைய அதிகாரிகள், அவரை கடைசி வரை ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கவில்லை.

அதிகாரிகளின் செயலால் மனமுடைந்த மதுமதியும் அவரது தந்தையும், செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாமலே மீண்டும் வீடு திரும்பினர். இதையடுத்து, ரயில் நிலைய அதிகாரிகளின் செயலை கண்டித்து கருத்து தெரிவித்துள்ள மதுமதி, தன் தந்தை பல முறை வேஷ்டி அணிந்து துபாய் சாலைகளில் நடந்து சென்றுள்ளதாகவும், ரயிலிலும் பயணித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகளுக்கு உடைக்கட்டுப்பாடு இல்லாத நிலையில் இந்தியர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டியை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட துபாய் ரயில் நிலைய அதிகாரிகள் மீது மதுமதி அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

English Summary:

Indian wearing dhoti not allowed on Dubai metro

A 67-year-old Indian visitor to Dubai was stopped from getting on the Dubai metro, apparently for wearing dhoti, India’s traditional dress. According to the victim’s daughter Madhumati, a policeman stopped them near the punching gates of the Etisalat metro station last Saturday and told her father that this dress was not allowed and he could not go on the metro wearing it. “I pleaded with him to let us go but the policeman refused to hear a word. It was really embarrassing and my father was really upset,” she said. Madhumati said that she tried her best to explain to the police officer that the dhoti was an Indian traditional dress, which covers the body fully but to no avail. She filed a formal complaint after the incident. She said her father, who is on a visit to Dubai, had travelled on the metro wearing the dhoti on various occasions but had never been stopped. According to the Roads and Transport Authority (RTA), there is no official dress code or policy for the Dubai metro. “What has happened is really surprising. There is no official restriction from the RTA and we have not given instructions on dress codes,” said Ramadan Abdullah, director of operations at the RTA’s Rail Agency. “I think anything that covers the body and is respectable should be allowed. I believe it was a personal reaction on the part of the policeman and this matter will be investigated,” he added.

Related posts