மாநிலங்களவையில் சச்சின் டெண்டுல்கர்!

Sachin Tendulkar in Parliament

புது தில்லி: ஆகஸ்ட் 06  2013: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு எம்.பி சச்சின் டெண்டுல்கர், மாநிலங்களவையில் நேற்று கலந்து கொண்டார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகை ரேகா, தொழிலதிபர் அனு அகா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியதால், அதில் சச்சின் டெண்டுல்கர் நேற்று கலந்து கொண்டார்.

அவை கூடுவதற்கு முன்பாகவே வந்த சச்சின், நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லாவுடன் இணைந்து அவைக்குள் நுழைந்தார். தனது இருக்கையில் அமருவதற்கு முன் சில எம்.பி.க்களுடன் கை குலுக்கினார். இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி வென்றதற்கு அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி பாராட்டு தெரிவித்தபோது, டெண்டுல்கர் மேஜையை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். அமளி காரணமாக அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டபோதும், சில எம்.பி.க்கள் டெண்டுல்கருடன் கைகுலுக்கினர். பிரதமர் மன்மோகன் சிங்கின் இருக்கையை நோக்கி சென்ற டெண்டுல்கர், அவருடன் கை குலுக்கினார். பார்வையாளர் மாடத்தில் அவரது மனைவி அஞ்சலி அமர்ந்திருந்தார்.

Cricket icon Sachin Tendulkar was the cynosure of all eyes in Rajya Sabha on Monday on the first day of the monsoon session of Parliament. Wearing blue striped shirt and black trousers, Tendulkar walked in with minister of state for parliamentary affairs Rajeev Shukla well before the House was called to order. Tendulkar, who was nominated as a Rajya Sabha member in April last year along with Bollywood actor Rekha and businesswoman Anu Aga, shook hands with some MPs before taking his seat. He was soon engrossed in animated discussion with noted lyricist Javed Akhtar, sitting next to him. All the while, his wife Anjali watched from the visitors’ gallery. Tendulkar thumped the desk when chairman Hamid Ansari congratulated the Indian cricket team for winning the Champions Trophy. When the House was adjourned for 10 minutes following disruptions, some MPs walked up to him to shake hands. Tendulkar went up to Prime Minister Manmohan Singh and shook hands with him.

Sachin Tendulkar in Parliament

Related posts