விவாகரத்து வழக்கில் மனைவியின் விவரங்களை தவறாக கொடுத்த கணவர்: கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கர்நாடகா: விவாகரத்து மனுவில் மனைவியின் விவரங்களை தவறாக கொடுத்ததால் மனைவியால் மனுவிற்கு பதில் அளிக்க முடியவில்லை. ரேணு என்பவர் கர்நாடக உயர்நீதிமன்ற தர்வாட் கிளையில் விவாகரத்து மேல்முறையிடு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் தெரிவித்தது என்னவென்றால் “என் பெற்றோர் வீடு ராஜஸ்தான் மாநிலம் ஷிரோனியில் உள்ளதால் அங்கு இணை உரிமைகளை மறுசீரமைத்தல் (restitution of conjugal rights) மனுவை தாக்கல் செய்தேன். அப்போது தான் என் கணவருக்கு விவாகரத்து கிடைத்தது பற்றி தெரியவந்தது. தீர்ப்பு நகலை பார்த்த பிறகு தான் எனது விவரங்களை தவறாக கொடுத்து மனுவிற்கு நான் பதில் அளிக்காத அடிப்படையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது தெரியவந்தது”என்று மனுவில் தெரிவித்திருந்தார்.இந்த மனு நீதிபதி சத்யநாராயணா மற்றும் நீதிபதி பாட்டில் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் விவாகரத்து வழக்கை புதிய வழக்காக நடத்த உத்தரவிட்டனர். கணவர் மற்றும் மனைவி இருவரையும் ஹுப்பல்லி குடும்ப நீதிமன்றம் முன் அடுத்த விசாரணை தேதியில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

Related posts