பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார்.சட்டவிரோத பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சியினருக்கு பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

சுபஸ்ரீ குடும்பத்துக்கு அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5லட்சம் வழங்க வேண்டும். பிறகு அந்த தொகையை அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர். சட்டவிரோத பேனரை தடுக்கத் தவறிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டனர்.

Related posts

One Thought to “பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு”

  1. nice, here after peoples will relish

Comments are closed.