the Indian cultural festival in Peru at the Capital city Lima was inaugurated by Indian Vice president Mr Hamid ansari
3 நாள் சுற்றுப்பயணமாக பெரு நாட்டிற்கு சென்றுள்ள குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, இந்திய கலாசார திருவிழாவை அந்நாட்டின் தலைநகரமான லிமாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்த திருவிழா துவக்க நிகழ்ச்சியில் பெரு நாட்டினுடைய துணை அதிபர் மரிசோல் எஸ்பினோஸாவும் பங்கேற்றார். இந்திய துணை ஜனாதிபதி அன்சாரி தனது பெரு நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு கியூபாவுக்கு சென்று அங்கும் இதே போன்ற இந்திய கலாசார திருவிழாவை துவக்கி வைக்கிறார்.