காஷ்மீரில் குழந்தைகளை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: குழந்தை உரிமை நிபுணர் எனாக்ஷி கங்குலி மற்றும் பேராசிரியர் சாந்தா சின்ஹா தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஆகியோர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். காஷ்மீரில் குழந்தைகளை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பதை ஊடகங்கள் தெரிவித்தது.சுதந்திரம் மற்றும் உயிர் இழப்பு மீறல்களை நீதித்துறை மறு ஆய்வு செய்ய வேண்டும் . தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை உயர்நீதிமன்றத்தின் சிறார் நீதிக் குழுவின் முன் ஆஜர்படுத்த வேண்டும் .அவர்களை சிறார் நீதிக் குழுவின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வர வேண்டும்.சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts