தொகுப்பாளர், இசையமைப்பாளாரான ஜேம்ஸ் வசந்தன் கைது

music director james vasanthan arrested

நீலாங்கரை அருகில் உள்ள பாலவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஜேம்ஸ் வசந்தன். திரைப்பட இசையமைப்பாளாரான இவர், சுப்பிரமணியபுரம், பசங்க, ஈசன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் உள்ள ராதா வேணுபிரசாத் (65) என்ற பெண்ணுக்கும் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை  தன்னை  ஜேம்ஸ் வசந்தன்  தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி ராதா வேணுபிரசாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஜேம்ஸ் வசந்தன்

இந்த வழக்கு தொடர்பாக ஜேம்ஸ் வசந்தனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வந்த போது அங்கு நீதிபதி இல்லாததால் செங்கல்பட்டுக்கு அழைத்து சென்றனர். இது குறித்து ஜேம்ஸ் வசந்தன் ஊடகத்தினரிடம் கூறுகையில், என் மீது என்ன வழக்கு போட்டு உள்ளார்கள் என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை. தீவிரவாதியை கைது செய்வது போல் 40க்கும் மேற்பட்ட  போலீஸார்  என் வீட்டுக்குள் புகுந்து கைது செய்துள்ளனர். மேலும் எனது பக்கத்து வீட்டில் உள்ள பெண் எனது இடத்தை கேட்டதற்கு நான் தரமறுத்துவிட்டேன். போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்க்கு அவர் வேண்டியவர் என்பதால் என் மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர் என்றும் இதில் தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

music director james vasanthan arrested

neighbour Radha venuprasad(65) gave complaint to the police on saturday regarding Oral dispute

Related posts