டெல்லி பல்கலைகழகத்தில் மாணவிக்கு ஏற்ப்பட்ட அவலம்

Women raped in Delhi university

டெல்லியில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் மானபங்கம் படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர் பெண்களுக்கான பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயின்றுவந்தார். இந்நிலையில் இவரை சந்திக்க வந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் திடீரென்று அப்பெண்ணை அடித்து தகாத முறையில் நடந்துக்கொண்டார். இதனால் அப்பெண் கூச்சலிட்டுள்ளார் .மாணவியின் கதறல் சத்தம் கேட்டு அங்கு குவிந்த பிற மாணவர்கள் முன்னாள் மாணவரை அடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவிக்கு ஏற்பட்ட அவலத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.கே. சொபோரி, இத்தகைய குற்றங்கள் மற்றும் இக்குற்றங்களில் ஈடுபடுபவர்களை மன்னிக்க முடியாது. மேலும் இக்குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Women raped in Delhi university:

Related posts