3 Year Old Murdered in Yavatmal in Suspected Human Sacrifice
மகராஷ்டிராவில் காணாமல் போன மூன்று வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலில் ஏற்பட்டிருக்கும் காயத்தை பார்த்தால், அவர் நரபலி போன்ற மூடநம்பிக்கை காரணமாக பலியாகியிருக்காலம் எனத் தெரிவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மகராஷ்டிராவில் உள்ள யவத் மால் மாவட்டத்தில் ஒரு இடத்தில் கட்டிடப்பணி நடந்து வந்தது. அந்த இடத்தில் 3 வயது பெண் குழந்தை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுகிடந்தார். உடனே போலீசார் சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அக்குழந்தை யாரென விசாரித்தபோது, மூன்று நாட்கள் முன்னர் அதே இடத்தில் காணாமல் போன ஒரு குழந்தை என தெரியவந்தது. அக்குழந்தையின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு ஆங்காங்கே சிதறிக் கிடந்தது.குழந்தையின் உடலில் இருந்த காயங்களை பார்க்கும்போது, யாரோ அதனை நரபலி கொடுத்திருக்கலாமென பெற்றோரும், உறவினர்களும் போலீசில் புகார் செய்துள்ளனர். இது தொடர்பாக கட்டிடப் பணியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். பின்னர் இருவரையும் அனுப்பி விட்டனர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக தெரிவித்த குழந்தையின் தந்தை, எனது மகளை கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படவேண்டும். அவர்களை உடனடியாக பிடித்து தூக்கிலிட வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
3 Year Old Murdered in Yavatmal in Suspected Human Sacrifice