spicejet rams over a buffalo at surat airport குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் எருமை மாட்டின் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானத்தின் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில் அதிருஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர். குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து நேற்றிரவு 7.20 மணியளவில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் எஸ்ஜி 622 ரக விமானம் டெல்லி கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தது. ஓடுதளத்தில் அந்த விமானம் பயணிக்க தொடங்கியபோது திடீரென எருமை மாடு என்று குறுக்கே வந்தது. அந்த மாடு விமானத்தின் பக்கவாட்டில் மோதியது. இந்த சம்பவத்தால் விமானத்தின் பக்கவாட்டு பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விமானி, உடனடியாக விமானத்தின் வேகத்தை குறைத்து நிறுத்தி, பார்க்கிங் பகுதிக்கு விமானத்தை கொண்டு சென்று நிறுத்தினார். இச்சம்பவத்தால் விமானத்தில்…
Read MoreCategory: தமிழ் சிறகுகள் By Roopa Rajendran
பிரேசிலில் ஒருவரின் வயிற்றில் உயிருடன் 2 அடி மீன் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
The stomach-churning moment a huge LIVE fish is removed from a man’s intestine பிரேசிலில் ஒருவரின் குடலில் உயிரோடு துடித்துக் கொண்டிருந்த 2 அடி நீளமுள்ள மீன் ஒன்று அறுவை சிகிச்சை மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளது. பிரேசிலின் லான்ரினா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர். அப்போது அவரது குடல் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த மீன் இருந்தது தெரியவந்தது. அந்த நபரின் உடலில் துளையிட்டு மீன் உள்ளே சென்றிருக்கலாம் எனக் கருதிய மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். அறுவை சிகிச்சையின்போது அந்த நபரின் உடலில் இருந்து நீளமான மீனை மருத்துவர் உயிரோடு அகற்றினார். அப்போது உடன் இருந்த மருத்துவர்கள் அதனை வீடியோ எடுத்ததுடன், கூச்சலிட்டு ஆரவாரம் செய்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைந்த நபர்,…
Read Moreசென்னையில் துப்பாக்கி முனையில் மருத்துவர் வீட்டில் பணம் நகை கொள்ளை
Chennai doctor’s wife robbed at gunpoint சென்னை அண்ணா நகரில் டாக்டரை கட்டிப்போட்டு துப்பாக்கிமுனையில் 75 சவரன் நகைகள், 4 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை அண்ணாநகர் கிழக்கு 15-வது தெரு ‘க்யூ’ பிளாக்கில் வசித்து வருபவர் டாக்டர் ஆனந்தன். இவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு மருத்துவராக உள்ளார். இவருடைய மகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். நேற்று ஆனந்தன், தனது மனைவி, பெரியம்மா மற்றும் வேலைக்கார பெண் மீனாவுடன் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் டாக்டர் ஆனந்தன் வீட்டுக்குள் 2 மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியை காட்டி ஆனந்தனை மிரட்டி வீட்டின் பீரோ சாவியை…
Read Moreஐந்து காசுக்காக 41 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் வழக்கு
DTC spent Rs 47,000 in case against conductor for loss of 5 paisa கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்னர் பயணி ஒருவரிடம் ஐந்து பைசா குறைவாக டிக்கெட் பணம் வாங்கியதாக நடத்துனர் ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கின் செலவு தற்போது நாற்பதாயிரத்தைத் தாண்டியுள்ளதாக டெல்லி போக்குவர்த்து கழகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 1973ம் ஆண்டு டெல்லி போக்குவரத்துக் கழகத்தில் (டி.டி.சி.) பணியாற்றிய நடத்துனர் ரன்பீர் சிங் என்பவர் பயணி ஒருவரிடம் 15 காசு மதிப்புள்ள டிக்கெட்டிற்கு 10 காசு மட்டுமே பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார். அதனைத் தொடர்ந்து துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 1976ம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ரன்பீர். இதற்கு எதிராக தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ரன்பீருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் பட்டது. உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கிலும்…
Read Moreபெங்களூரில் கோயிலுக்குள் நுழைந்த எட்டு வயது தலித் சிறுவனை தடியால் தாக்கிய பூசாரி
He allegedly assaulted a seven-year-old Dalit boy at a temple in Nelamangala பெங்களூரில் கோயிலுக்குள் நுழைந்த தலித் சிறுவர்களை அங்கிருந்த பூசாரி அடித்து உதைத் துள்ளார். ஒரு சிறுவனை தடியால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட வர்கள் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றபோது போலீ ஸார் துணையுடன் ஆதிக்க சாதியினர் கட்டப்பஞ்சாயத்து செய் துள்ளனர். பெங்களூரை அடுத்து நெலமங்களாவில் உள்ள ஜெயநகரை சேர்ந்தவர் ராஜ்குமார். செருப்பு தைக்கும் தொழிலாளியான இவருடைய மகன் சந்தோஷ் (7). அங்குள்ள அரசுப் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறான். கடந்த 19-ம் தேதி ருத்ரேஸ்வரா கோயில் பூசாரியால் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சிறுவன் சந்தோஷை சந்தித்துப் பேசிய போது அவன் கூறியதாவது: நானும் எனது நண்பர்களும் கிரிக்கெட் விளையாடிவிட்டு அருகில் உள்ள ருத்ரேஸ்வரா…
Read Moreஅள்ளி வழங்கிய சூரத் தொழிலதிபர் : தீபாவளியை முன்னிட்டு ஊழியர்கள் 500 பேருக்கு புது கார்
Diamond Merchant Does an Oprah, Gifts Cars, Homes, Jewellery to Employees சூரத்தில் தீபாவளியை முன்னிட்டு ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்ற வைர ஏற்றுமதி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார், பிளாட் மற்றும் நகைகளை போனஸ் ஆக வழங்கி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அந்த நிறுவனம், தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 1200 ஊழியர்களின் வாழ்வில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளிச்சத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. கிட்டதட்ட இன்பக்கடலிலேயே மூழ்கிப் போகும் அளவிற்கு போனஸை வாரி இறைத்துள்ளனர் இந்நிறுவனத்தினர். அந்நிறுவனத்தின் தலைவரான சாவ்ஜி தொலாக்கியா, தனது பணியாளர்களான கைவினைஞர்கள் மற்றும் பொறியாளர்களை அழைத்து கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை காண்பித்து அவர்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ள சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஊழியர்களின்…
Read Moreவறுமையின் காரணத்தால் தனது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்
‘கணவனின் குடிப்பழக்கத்தால் குடும்பம் வறுமையில் வாடி அழுத குழந்தைக்கு பால் வாங்க கூட காசில்லாததால் அடித்து கொன்றேன்‘ என குழந்தை கொலையில் கைது செய்யப்பட்ட தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிபேட்டை கோயில் கரடு பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (28). இவரது மனைவி ஜோதிமணி (25). இவர்களுக்கு ஸ்ரீதேவி என்ற மகளும், ஒன்றரை வயதில் திவ்யதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். சத்யராஜுக்கு, மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்ப செலவுக்கு சரியாக பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை, வீட்டில் ஜோதிமணி அழும் சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது, குழந்தை திவ்யதர்ஷினி உடல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளது. அதுபற்றி விசாரித்தபோது, கணவர் சத்யராஜ், குழந்தையை அரிவாளால் தாக்கி கொன்று தீவைத்து கொளுத்திவிட்டு சென்று விட்டார்…
Read Moreஅக்டோபர் 17 உலக வறுமை ஒழிப்பு நாள்
Today is International Day for the Eradication of Poverty உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அங்கு அவரது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர் சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது. ஐ.நா., சபையால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது. வறுமையை ஒழிக்கவும், அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. “ஒருவர் கூட வறுமையில் இருக்கக்கூடாது : வறுமையால் உருவாகும் வன்முறைக்கு முடிவு: யோசித்து முடிவெடுத்து வறுமைக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுதல்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. எது வறுமை:அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், சத்தாண உணவு, மருத்துவம், வேலை வாய்ப்பு, சுகாதாரம், கல்வி,…
Read Moreஅக்டோபர் 10 உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்
October 10 – World Day Against the Death Penalty உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தற்போது மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. குற்றம் புரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் மிக கொடுமையான தண்டனையான மரண தண்டனையைக் கொண்டுள்ள சில நாடுகளும் அதைக் கைவிட வேண்டும் என்ற நோக்கிலே “மரண தண்டனை எதிர்ப்பு நாள்” கடைபிடிக்கப்படுகிறத 2002 மே 13 இல் ரோம் நகரில் கூடிய “மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு” என்ற அரச சார்பற்ற அமைப்புகளின் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் 2003…
Read Moreஇன்று சந்திரகிரகணம் இந்தியாவில் கடற்கரை நகரங்களில் காண முடியும்
Total lunar eclipse to be partially visible in India இயற்கை அதிசயங்களில் ஒன்றான சந்திர கிரகணம் இன்று மாலை நிகழ்கிறது. இவ்வாண்டில் நிகழவிருக்கும் இரண்டாவது சந்திர கிரகணம் இதுவாகும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் பொழுது, பூமியின் நிழல், சந்திரன் மீது விழுவது சந்திர கிரகணம் என்றழைக்கப்படுகிறது. இன்று நிகழும் முழு சந்திர கிரகணத்தால், சந்திரன் கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும் என்று மும்பை நேரு கோளரங்கம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாலை 5.54 நிமிடங்களுக்கு நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணம் 11 நிமிடங்கள் மட்டுமே தென்படும். Total lunar eclipse to be partially visible in India A total lunar eclipse, the second and last one of this year,…
Read More