ஐந்து காசுக்காக 41 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் வழக்கு

DTC spent Rs 47,000 in case against conductor for loss of 5 paisa

DTC spent Rs 47,000 in case against conductor for loss of 5 paisa
DTC spent Rs 47,000 in case against conductor for loss of 5 paisa

கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்னர் பயணி ஒருவரிடம் ஐந்து பைசா குறைவாக டிக்கெட் பணம் வாங்கியதாக நடத்துனர் ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கின் செலவு தற்போது நாற்பதாயிரத்தைத் தாண்டியுள்ளதாக டெல்லி போக்குவர்த்து கழகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த 1973ம் ஆண்டு டெல்லி போக்குவரத்துக் கழகத்தில் (டி.டி.சி.) பணியாற்றிய நடத்துனர் ரன்பீர் சிங் என்பவர் பயணி ஒருவரிடம் 15 காசு மதிப்புள்ள டிக்கெட்டிற்கு 10 காசு மட்டுமே பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார். அதனைத் தொடர்ந்து துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 1976ம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ரன்பீர். இதற்கு எதிராக தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ரன்பீருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் பட்டது. உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கிலும் ரன்பீருக்கும் சாதகமான தீர்ப்பே கிடைத்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் டி.டி.சி. சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணை வரும் ஜனவரி 19ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக செலவிடப்பட்ட தொகை குறித்து விசாரணையின் போது உயர்நீதிமன்ற நீதிபதி ஹிமா கோஹ்லி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த டி.டி.சி. இந்த வழக்குத் தொடர்பாக இதுவரை ரூ. 47,795 செலவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

DTC spent Rs 47,000 in case against conductor for loss of 5 paisa

DTC has spent Rs 47,795 in pursuing litigation against a former conductor for allegedly charging 5 paise less for a ticket 41 years ago, the state-run public transporter told the Delhi High Court. The submission was made before Justice Hima Kohli in response to the court’s query regarding the amount of money that Delhi Transport Corporation (DTC) spent in pursuing the matter since February 1982. Singh, in 1973, had allegedly charged a woman passenger 10 paise for a 15 paise ticket and the incident came to light when a flying squad of ticket-checkers boarded the bus.The flying squad of DTC had decided that he had cheated the Corporation and had been negligent and thereafter, a departmental inquiry was conducted and he was found guilty of causing a loss of 5 paise to the public exchequer. His dismissal from service was ordered on July 15, 1976 on the grounds that he was a repeat offender and Singh had challenged the same before a labour court. The labour court in 1990 had ruled in his favour and had directed DTC to reinstate him with full wages. DTC, thereafter, challenged the labour court verdict in the high court which in 2008 dismissed the corporation’s plea. DTC again moved the high court through the present review petition, contending that an employee who cheated the government can’t be allowed to go scot-free. The transport corporation has also opposed Singh’s demand for back wages. DTC has alleged that Singh had allowed ticketless travel to several passengers. The high court had also sought information regarding the dues payable and already paid to the former DTC conductor Ranbir Singh. In response to this, DTC has submitted that it has paid over Rs 1.5 lakh of the total amount of about Rs four lakh, which was payable to Singh as salary, gratuity, pension, pay fixation etc. Since his dismissal from service in 1976 till his retirement on September 30, 2002. DTC also told the court that Rs 2.72 lakh remains to be paid to him. Meanwhile, the counsel for Singh sought time from the court to peruse the affidavit filed by DTC, which was allowed by the court. The court has now fixed the matter for further hearing on January 19.

Related posts