சென்னை:தமிழகத்தில் ஆணவக்கொலைகள் அதிகரித்து வருவதாகவும் , இது குறித்து பத்திரிகைகளில் தினம்தோறும் செய்திகள் வருவதாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். இந்த விசாரணையில் ஆணவக்கொலையை தடுப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல உத்தரவை பிறப்பித்தது.தமிழகத்தில் ஆணவக்கொலையை தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி பதிலளிக்க உத்தவிட்டனர்.மேலும் மத்திய அரசு ஆணவக்கொலைகளை தடுப்பதற்காக ஒரு வரைவு சட்டத்தை தயாரித்தது.அந்த சட்டத்தின் தற்போதைய நிலை பற்றி பதில் அளிக்க மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆணவக்கொலையை தடுக்க சட்டம் உருவாக்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
