ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மறுநியமனம் செய்வதை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது.இந்த காலி இடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டது. வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ,வருவாய்த்துறை செயலாளர்,வருவாய் நிறுவாகத்துறை ஆணையர் ஆகியோர் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார் நீதிபதி.

Related posts