Tamilnadu new DGP – Mr.Ashok Kumar. தமிழ் நாடு காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு தலைமை இயக்குநராக உளவுத்துறை டி.ஜி.பி.யாக இருந்த திரு அசோக் குமாரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு காவல் துறையினுடைய சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்த கே.ராமானுஜம் நவம்பர் மாதம் 4-ம் தேதியோடு பணிக்காலம் முடிவடைந்து ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி, அந்தப் பணிக்கு தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறையின் டி.ஜி.பி.யாக பணியாற்றிய திரு அசோக் குமாரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் திரு.மோகன் வர்கீஸ் சுங்கத் உத்தரவிட்துள்ளார்.
இதனிடையே மேலும், ஓய்வு பெறும் டி.ஜி.பி. திரு.ராமானுஜத்தை தமிழ்நாடு அரசின் ஆலோசகராக நியமித்து உள்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார்.
புதிய டி.ஜி.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ள திரு.அசோக் குமார், ஹரியாணா மாநிலத்தில் இருக்கும் சோலார்பேட் பகுதியைச்சார்ந்தவர். 15-6-1955-ம் ஆண்டு பிறந்த திரு.அசோக் குமார், எம்.காம். எம்.பில். பயின்றுள்ளார். தமிழ், ஹிந்தி, மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாக பேசுவும், எழுதவும் அறிந்தவர்.
திரு.அசோக் குமார் கடந்த 1982 -ம் ஆண்டில் ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி அடைந்து, முதல் பணியாக தமிழ்நாடு அதிகாரியாக மதுரை மாவட்டம், திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார். அது போல், தமிழ்நாடு காவல்துறையின் பற்பல நிலைகளில் திரு.அசோக் குமார் பணியாற்றியிருக்கிறார்.
மேலும் திரு.அசோக்குமார் கடந்த 2013-ம் ஆண்டுக்கு முன் வரை மத்திய அரசு பணியில், சி.பி.ஐ.யின் தெற்கு மண்டல இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். பின் தமிழ்நாடு அரசுப் பணிக்குத் மறுபடியும் வந்த திரு.அசோக் குமார், தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, தமிழ்நாடு காவல்துறைக்குள்பட்ட உளவுத் துறையின் ஏ.டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு கடந்த ஆண்டு டி.ஜி.பி.யாக பதவி உயர்வும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் காவல்துறையினுடைய சட்டம், மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ள திரு.அசோக் குமார், 2 நாட்களில் இந்த புதிய பொறுப்பினை ஏற்பார் என அறியப்பட்டுள்ளது.
Tamilnadu new DGP – Mr.Ashok Kumar.
Senior IPS officer Mr.Ashok Kumar was appointed as the new Director General of Police (DGP) of Tamil Nadu state in position of Mr.K Ramanujam who on retiring and being appointed as Adviser to the TN Government. After due consideration of the panel of names sent by Union Public Service Commission (UPSC), the state government was appointing Ashok Kumar as the new DGP, Chief Secretary Mohan Verghese Chunkath conveyed in a statement here. Ashok Kumar was DGP intelligence prior to the latest elevation. Ramanujam would be the new Adviser to Tamilnadu Government in the rank of DGP for one more year from tomorrow or until the need exists, the latest statement added.