ஒரே நாளில் பீகார் தலைநகர் பாட்னாவில் மின்னல் தாக்கி 25 பேர் பலி

Lightning claims more than 25 lives in Bihar in a single day

Lightning claims more than 25 lives in Bihar in a single day

 பீகாரின் பல மாவட்டங்களில் இந்த வருட பருவமழை கனமழையாக பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று பெய்த மழை இடி, மின்னலுடன் கூடிய கனத்த மழையாக இருந்ததால், மக்கள் பெரும் பாதிப்புக்கும் பீதிக்கும் உள்ளாயினர். இதில், அவுரங்பாத் மாவட்டத்தில் ஏற்பட்ட மின்னலில் 4 குழந்தைகளும், 2 விவசாயிகளும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இது போன்று பங்கா மாவட்டத்திலும் வயல் பகுதிகளில் வேலை செய்து கொண்டிருந்த 5 விவசாயிகளின் உயிரை மின்னல் பறித்தது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்னல் பாய்ந்ததில் 14 பேர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.  30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மின்னல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஒரே நாளில் 25 பேர் இறந்து போனதும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருப்பதும் மக்களிடையே பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Lightning claims more than 25 lives in Bihar in a single day

 More than 25 persons have been killed and scores of others injured as lightning struck various parts of Bihar yesterday, official sources said today. Six persons died after being struck by lighting in two incidents in the villages under Town and Obra blocks of Bihar’s Aurangabad district last evening, the sources said.

Related posts