வடமேற்கு டெல்லி சிறுவர் காப்பகத்திலிருந்து 33 பேர் தப்பியோட்டம்

33 inmates escape from Delhi juvenile home, 14 held

33 inmates escape from Delhi juvenile home, 14 held

 வடமேற்கு டெல்லி சிறார்கள் காப்பகத்தில் இருந்த ருபாய் 35 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து 33 இளம் குற்றவாளிகள் தப்பி ஓடிய  சம்பவம் தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரைப்படங்களில் வரும் சிறை உடைப்பு காட்சிகள் போன்றே சிறையை உடைத்துவிட்டு இளம் குற்றவாளிகளான இந்த சிறுவர்கள் செய்து தப்பியோடியிருக்கின்றனர். அந்த காப்பகத்தில் பணம் வைத்திருக்கும் பெட்டகத்தை உடைத்து விட்டு  அதில் இருந்த ருபாய் 35 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, சுமார் 50 சிறுவர்கள் அங்கிருந்த காவலாளியை அடித்து, உதைத்து காயப்படுத்தினார்கள். அங்கிருத்த கண்ணாடி ஜன்னல்களை கற்களால் அடித்து உடைத்து சூறையாடிய இளம் குற்றவாளிகள், மதில் சுவர் மேல் பகுதியில் உள்ள முள் வேலியின் மேல் மெத்தைகள் விரித்து காப்பகத்தின் நிர்வாக அலுவலக பகுதிக்கு சென்றுள்ளர்கள். பிறகு சமையல் அறையில் இருந்த சமையல் வாயு சிலிண்டரை திறந்து விட்டு சூப்பிரண்ட் அலுவலகத்தை தீ வைத்து கொளுத்தி அங்கு இருந்த கோப்புகள் அனைத்தையும் தீயில் போட்டு எரித்தார்கள். அது போல் வெளிப்பகுதியில் இருந்த பூட்டிய மரக்கதவுகளையும் தீ வைத்து கொளுத்தி சுமார் 50 இளம் குற்றவாளிகள் தப்பிவிட்டனர். எனினும் அவர்களில் 15 பேரை காவல்துறையினர் பிடித்துவிட்டார்கள். மீதமுள்ளவர்களையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

33 inmates escape from Delhi juvenile home, 14 held

Thirty three inmates of a juvenile home in North West Delhi escaped, out of which 14 have been arrested, police said on Sunday. The incident was reported at Seva Kutir, a juvenile home located at Mukherjee Nagar area of North West Delhi. “At 8:30 pm Saturday, around 58 juveniles went up to the home’s terrace where they started shouting, burnt mattresses and pelted stones. They also tampered with a few cylinders because of which gas leaked,” said police. Later, they broke doors and damaged property inside the home. Thirty-three of them managed to flee outside from the terrace. On Sunday morning, 14 of them were apprehended by the police while rest are still missing. The boys are in the age group of 15-17 years old.

Related posts