ஆந்திராவில் தொடர்ச்சியான போராட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Telangana turmoil – Is President Rule the only option left?

Telangana turmoil – Is President Rule the only option left?

கடலோர ஆந்திராபிரதேசம் மற்றும் இராயலசீமாவை உள்ளடக்கிய சீமாந்திராவில் தெலுங்கானாவுக்கு எதிராக உச்சகட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது. 2 மாதத்திற்கும் மேலாக இந்த போராட்டங்கள் நீடித்து வருகிறது. இதனால் ஆந்திரபிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டிய அவசியத்திற்கு மத்திய அரசு தள்ளபட்டிருக்கிறது. மத்திய அரசின் தெலுங்கானாஅறிவிப்பால் சுமார் 2 மாத காலமாக போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.  ஆகையால் உச்சகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்துடன் ஹைதராபாத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஹைதராபாத்திலும், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியிலும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில்  போக்குவரத்து, மின்சாரம்,கல்வித்துறை ஊழியர்கள் என எல்லாத்தரப்பினரும் ஈடுபட்டு வருகிறார்கள். மின்சார வாரிய ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் இறங்கியுள்ளதால் சீமாந்திரா பிரதேசமே இருளில் மூழ்கியுள்ளது. மருத்துவமனைகள், ரயில்சேவைகள் மிகவும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன . சீமாந்திராவின் 13 மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. சீமாந்திராவின் திருப்பதி, விஜயவாடா,  மற்றும் விசாகப்பட்டினம் விமான நிலையங்கள் தற்போது சேகரித்து வைக்கப்பட்ட  மின்சாரம் மூலமே இயங்கி வருகின்றன. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் விமான நிலையங்களை மூட வேண்டிய  அபாயம் இருக்கிறது. விஜயநகரத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இன்று காலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அத்துடன் கலவரத்தில் ஈடுபடுவோரை கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீமாந்திராவில் தற்போதைய உச்சகட்ட போராட்டம் தொடர்ந்தும் நீடித்தால் ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு மத்திய அரசு தள்ளப்படும். அதைத் தவிர போராட்டத்தை ஒடுக்க வேறு எந்த ஒருவாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. அதுவும் ஆந்திராவில் காங்கிரஸ்தான் ஆளும் கட்சி. மாநில காங்கிரஸ் அரசை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு டிஸ்மிஸ் செய்யும் போது முதல்வர் கிரண்குமார் ரெட்டி தனிக் கட்சி தொடங்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுவார். இதனால் சீமாந்திரா விவகாரம் காங்கிரசுக்கு இடியாப்ப சிக்கலை உருவாக்கியுள்ளது.

Telangana turmoil – Is President Rule the only option left?

Telangana statehood issue is heading towards a political and civic crisis with power employees’ strike in Seemandhra spreading to all the 13 districts on Tuesday. Faced with the spectre of continuing violence in Seemandhra and Ralayaseema regions, the Congress-led UPA government may be left with no other option than to impose President’s Rule in Andhra Pradesh.

Related posts