மதுரை: மதுரையை சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா ஆகியோர் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்ற தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வை ரத்து செய்து மீண்டும் புதிய மருத்துவ கலந்தாய்வு நடத்த கோரி மனுதாக்கல் செய்தனர்.மனு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் தமிழகத்தில் இருப்பிட சான்றிதழ் பெறுவதில் விதிமீறல் ஏதேனும் செய்திருந்தால் மாணவர்களின் சான்றிதல்களை மீண்டும் சரிபார்க்கலாம் என்று தெரிவித்தார்.ஆனால் மீண்டும் புதிய மருத்துவ கலந்தாய்வு நடத்துவது வாய்ப்பு இல்லை என நீதிபதி தெரிவித்தார்.
மருத்துவ கலந்தாய்வை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு
