நடுவானில் திறந்த விமான கதவுகள் பயணிகள் உயிர் தப்பினர்

ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 747 ஜம்போ ஏஐ 964 என்ற விமானம், நேற்று காலை சவூதி அரேபியா ஜெட்டா நகரிலிருந்து புறப்பட்டு மும்பைக்கு வந்து கொண்டிருந்தது.
புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 400 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தின் விமானி அறையின் ஒரு கதவு சரியாக மூடப்படாதது குறித்து விமானி அறையின் கருவி எச்சரித்தது.

இதையடுத்து அந்த விமானம் மீண்டும் ஜெட்டா நகர விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்தனர். ஜெட்டா விமான நிலைய என்ஜினியர்கள் கதவு சரி செய்தனர். இதையடுத்து இரண்டு மணிநேர தாமதத்திற்கு பிறகு அந்த விமானம் புறப்பட்டது.

இதனால் விமானம் ஐதராபாத்திற்கு செல்லாமல் நேராக மும்பைக்கு பத்திரமாக வந்து இறங்கியது. பின்னர் ஐதராபாத் பயணிகள் மற்றொரு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.

download (1)

Related posts