வெஸ்ட் இண்டிஸ் இந்தியா கிரிக்கெட் போட்டி இந்தியா வெற்றி. கண்ணீருடன் சச்சின் விடை பெற்றார்.

கிரிக்கெட் அரங்கில் இருந்து கண்ணீருடன் சச்சின் டென்டுல்கர் இன்று விடைபெற்றார் . இவரது 200வது மற்றும் கடைசி டெஸ்டில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆட்டம் முடிந்ததும் கையை அசைத்தப்படி ரசிகர்களை பார்த்து கண்ணீர் மல்க நடந்து சென்றார்.
இவருடன் விராத் கோஹ்லியும் மைதானத்தில் நின்று கொண்டிருந்த சச்சின் மகன் ஆகியோரும் கண்ணீர் விட்டபடி திகைத்து போய் நின்றனர். கிரிக்கெட் உலகில் சாதனை மன்னன் இன்றுடன் ஓய்வு பெற்றார். கிரிக்கெட் இல்லாத எனது வாழ்வை நினைத்து பார்க்க முடியவில்லை என்று அவர் ஓய்வு குறித்து சச்சின் கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பிய நன்றி கடிததத்தில் கூறியிருந்தார். சல்யூட் சச்சின், குட்பை.,

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற. கோல்கட்டா டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என, தொடரில் முன்னிலை வகிக்கித்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 182, இந்தியா 495 ரன்கள் எடுத்தன. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்து, 270 ரன்கள் பின்தங்கி இருந்தது. கெய்ல் (6) அவுட்டாகாமல் இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 187 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

ஆட்ட நாயகன் ஓஜாவும் ( 10 விக்கெட்) , தொடர் நாயகனாக ரோகித்சர்மாவும் ( 2 டெஸ்ட் போட்டியில் சதம் ) தேர்வு செய்யப்பட்டனர். ஆட்டம் முடிந்ததும் சச்சினுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில், சச்சின் டெண்டுல்கருக்கு பிரிவு உபசார விழா நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: நான் கிரிக்கெட் விளையாட துவங்கி 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. 11 வயதில் நான் பயிற்சியை துவங்கினேன். என் விளையாட்டிற்கு என் தந்தை ஊக்கமளித்தார். நான் சாதிக்க வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்தார். இந்த நேரத்தில் அவர் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. என் தாய், மனைவி, மகள், மகன் ஆகியோரும் நான் தொடர்ந்து விளையாட உதவி செய்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

பத்திரிகையாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒவ்வொரு போட்டியிலும் ‘சச்சின், சச்சின்’ என்று குரல் கொடுத்து, என்னை ஊக்குவித்த ரசிகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சச்சின் கூறினார்.

தாய் – தந்தைக்கு மரியாதை: எனது வாழ்வில் எனக்கு வழிகாட்டியாக இருந்த எனது தந்தை, தாய் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர். இநரத்தில் எனது தந்தை இல்லையே என்று வருத்தமாக உள்ளது. நான் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டேன். இதனால் நான் சாதிக்க முடிந்தது. 11 வயது முதல் துவங்கிய எனது 24 வருட பயணம் நிறைவு பெறுகிறது. எனது வளர்ச்சியில் சகோதரருக்கும் பங்கு உண்டு, எனது மனைவி உறுதுணையாக இருந்தார். 2 குழந்தைகள் வைரம் போன்றவர்கள். பயிற்சியாளர்கள், சச்சின், சச்சின் என அழைத்து அன்பு ரசிகர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பி.சி.சி.ஐ., மற்றும் தேர்வாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் எனக்கு பல முறை ஆதரவாக இருந்துள்ளனர். மூத்த கிரிக்கெட் ஆட்டத்தை நான் டி.வி., மூலம் பார்த்து அதிகம் கற்று கொண்டேன்.
எனது சகோதரி எனக்கு முதல் பேட் பரிசாக வழங்கினார். எனது அணி எனது குடும்பம் போன்றது. எனது பள்ளி காலக்கட்டத்தில் இருந்து எனக்கு மீடியா அளித்த ஆதரவுக்கும், அனைத்து போட்டோகிராபர்களுக்கும் மாபெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.குட்பை என முடித்தார்.

மண்ணை தொட்டு வணங்கினார்: அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்ததும் சச்சின் மீண்டும் மைதானத்திற்கு வந்து குனிந்து இரண்டு கைகளால் தொட்டு கண்ணில் ஒத்தி வணங்கிய படி சென்றார்.

download (2)

 

sports-cricket-IndiavsWestIndies_11-14-2013_126400_l

 

 

https://www.youtube.com/watch?v=AzLil8ImkUw

 

With a lump in his throat Sachin begins his speech by thanking his father Ramesh Tendulkar.
#The roaring cheer from the crowd is unbelievable. I miss him, says the maestro. He thanked his mother for taking care of such a naughty child.

#His mother’s prayers have given him strength to play. He also thanked his aunt and uncle with whom he stayed for a while. He thanked his brothers Nitin, Ajit and sister Savita. Sachin to Anjali:

#Sachin to Anjali:

The most beautiful thing happened to me when i met my wife Anjali. Those were special years. It will also continue that way. Anjali being a doctor, there was a beautiful career ahead of her. But she let me continue with cricket and took the responsibility of my family. Without her I wouldn’t have been able to play cricket. Thanks for bearing with me and always staying by my side through the ups and downs, This is the best partnership I have had in my life.

#Sachin to kids:

Time has flown by. I wanted to spend so much time with them. I have missed out on many things,. Thanks for your understanding. You are very special to me. I promise you that next 16 years or even more than that I will make up with the time lost.

#Sachin thanked his in-laws for allowing him to marrying Anjali. Sachin also thanked his childhood friends.

#He mentioned his coach Ramakant Achrekar. He recalled how he used to how on his scooter to practice matches. On a lighter note, he added ‘but sir has never said, well played! He can say that now as I no more have matched left.

#He thanked the MCA President and the team for his association with the Mumbai Cricket. He thanked BCCI for believing in his ability when he was selected in the squad at the age of 16.

#He thanked all the seniors he has played with. He also thanked Rahul Dravid, Sourav Ganguly, VVS Laxman who were present at the ground. He talked to the present squad and wished them good luck and hoped that they continue to serve the nation and bring laurels to the country.

#He even thanked all the coaches, his doctors and physios. He also remembered his late friend Mark Mascaranus. He also thanked his manager Vinod Naidu.

#He thanked the media, journalists and the photo journalists.

#Sachin to fans:

“Thank you fans for coming in for various parts of the world today. I have met so many of you who have fasted for me and done all sorts of things for me. ‘Sachinnn Sachinn’ will reverberate in my ears till I stop breathing…..Goodbye”.

#Sachin is now waving the Indian flag. He is surrounded by his team mates and family. It cannot get more emotional than this. The fans are crying. There is not a single spectator who doesn’t have tears in his eyes.

#He is now taking the farewell lap.

#MS Dhoni and Virat Kohli have lifted Sachin on their shoulders. Shikhar Dhawan and Murali Vijay are now carrying Sachin. The farewell lap is now complete.

Related posts