ஹைதராபாத் என்கவுண்டரில் நீதி விசாரணைக்கு உத்தரவு – உச்சநீதிமன்றம்

டெல்லி:கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்த நான்கு பேரை போலிஸ் என்கவுண்டரில் கொன்றது குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த விசாரணை குழுவில் முன்னாள் மும்பை ஐகோர்ட் நீதிபதி ரேகா பல்தோட்டா மற்றும் முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திக் உள்ளனர்.இந்த விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி எஸ் சிர்புர்கர் தலைமை தாங்குவார்.ஹைதராபாத்தில் அதன் இருக்கை இருக்கும்.இந்த குழு தனது விசாரணையை 6 மாதங்களுக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

Related posts