இந்து திருமணச் சட்டம் – முதல் மனைவியின் ஒப்புதல் இரண்டாவது திருமணத்தை சட்டப்பூர்வமாக்காது: பாட்னா உயர் நீதிமன்றம்

பாட்னா: பினோத் குமார் சிங் இம்பாலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எஃப்) உதவி சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் மனைவி ரஞ்சு சிங் அளித்த புகாரின் பேரில் பினோத் குமார் சிங் எதிராக துறை ரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டது.துறைசார் நடவடிக்கைகள் முடிந்தபோது, ​​ பினோத் குமார் சிங் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, தகுதிவாய்ந்த அதிகாரத்தின் உத்தரவின் பேரில் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.பினோத் குமார் சிங் பாட்னா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனு நீதிபதிகள் ஹேமந்த்குமார் ஸ்ரீவாஸ்தவா மற்றும் பிரபாத்குமார் சிங் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் முதல் மனைவியின் ஒப்புதலுடன் இரண்டாவது திருமணத்தை செய்ததாக பினோத் குமார் சிங் தெரிவித்திருந்தார்.ஆனால் முதல் மனைவியின் ஒப்புதல் இரண்டாவது திருமணத்தை சட்டப்பூர்வமாக்காது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related posts