திரையரங்குகளுக்கு செல்வோர் தங்களது சொந்த உணவு, தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்லலாம் – ஹைதராபாத் காவல்துறை

ஹைதராபாத்: ஹைதராபாத் நகர காவல்துறை ,மல்டிபிளெக்ஸ் மற்றும் ஒற்றை திரை திரையரங்குகளில் திரைப்பட பார்வையாளர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை உள்ளே கொண்டு செல்வதை கட்டுப்படுத்த முடியாது என்று கூறியுள்ளனர்.ஊழல் தடுப்பு ஆர்வலர் விஜய் கோபால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்ட தகவலுக்கு பதிலளித்த காவல்துறையினர், உணவு மற்றும் தண்ணீரை எடுத்துச் செல்ல சட்டத்தால் எந்த தடையும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர். 1955 ஆம் ஆண்டின் சினிமா ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், ஒரு வாடிக்கையாளர் தனது சொந்த சிற்றுண்டி பெட்டி அல்லது தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில் எந்த தடையும் இல்லை. சட்டம் இருந்தபோதிலும், பெரும்பாலான மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் வாடிக்கையாளர்களை பாதுகாப்பு சிக்கல்களைக் காரணம் காட்டி உணவு அல்லது பானங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காது.அப்படி சட்டத்தை மீறினால் சட்ட மீறல் துறையில் புகார் அளிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts