கண்டித்த கணினி ஆசிரியைக்கு கன்னத்தில் பளார் விட்டு சவ்வை கிழித்து சென்னை மதுரவாயல் அரசு பள்ளி மாணவன் அராஜகம்….

Student of Standard 12th Named Akash at a government school in Chennai Maduravoyal has allegedly slapped a Computer teacher கண்டித்த கணினி ஆசிரியைக்கு கன்னத்தில் பளார் விட்டு சவ்வை கிழித்து சென்னை மதுரவாயல் அரசு பள்ளி மாணவன் அராஜகம்…. மாணவனை பள்ளியை விட்டு நீக்க பள்ளி நிர்வாகம் முடிவு.. சென்னை கோயம்பேடு பகுதியை அடுத்து இருக்கும் மதுரவாயலில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இருக்கிறது. இங்கு சுமார் 500 க்கும் கூடுதலான மாணவ-மாணவிகள் பயில்கின்றனர். கணினி ஆசிரியராக புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சார்ந்த திருமதி.லட்சுமி (வயது 36) பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் நேற்று மாலை கணினி பாடம் நடத்திக் கொண்டிருந்த போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஆகாஷ் கணினியை திடீரென புகுந்து அணைத்து விட்டான். இதனால் மாணவன் ஆகாஷை…

Read More

ஓடும் பஸ்ஸில் மாணவிகளில் கேலி செய்த வாலிபருக்கு கல்லூரி மாணவிகள் கையால் பெல்ட் அடி.

youth attacked by Eve tease victim college Girls in Haryana ஹரியானா மாநிலத்தில் ஓடும் பஸ்ஸில் மாணவிகளில் கேலி  செய்து ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட வாலிபரை கல்லூரி மாணவிகள் தாங்கள் அணிந்திருந்தப் பெல்டால் அடித்து உதைத்தனர். கல்லூரி முடித்து வீடு திரும்பும் வழியில், பஸ்ஸில் பயணம் செய்த சகோதரிகள் இருவரை, அதே பஸ்ஸில் பயணம் செய்த கொண்டிருந்த ஒரு வாலிபர் தொடர்ந்து கேலி  செய்து ஈவ் டீசிங்கில் ஈடுபட்டுள்ளார். அந்த வாலிபர் டீசிங் செய்வதை கண்டும் காணாதது போல் மற்ற பயணிகள் இருந்த போதிலும் சற்றும் எதிர்பாராத வகையில் அந்த சகோதரிகள் கேலி செய்த வாலிபரை கடுமையாக தாக்கினார்கள். இந்த கடும் தாக்குதலால் நிலைகுலைந்த ஈவ் டீசிங் செய்த வாலிபரை, பஸ்சின் கண்டக்டர் அருகே இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் தீவிர…

Read More

இலங்கை தமிழர் நலனுக்காக அனைத்து தமிழர்களும் ஒன்று பட்டு போராட வேண்டும் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்

தமிழர்கள் எல்லோரும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்றிணைய வேண்டும் என உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் கூறியுள்ளார். உலகத்தமிழர் பேரமைப்பு சார்பாக தஞ்சை விளார்சாலையில் இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் 60வது பிறந்த நாள் விழா கூட்டம் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: பிரபாகரனின் பிறந்த நாளை உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடி இருகின்றனர். தமிழினம் இனம் பல்லாயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் 16 வயதில் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நான் அவரை 24 வயதில் சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை, இனியும் அவருடன் உள்ள தொடர்பு மிகச்சிறப்பாக தொடரும். உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் விடுதலைப்போராட்டம் நடந்துள்ளது. எந்த நாட்டிலும் விடுதலைப் போராட்டத்துக்கு…

Read More

ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்திய தூதரகம் மீது துப்பாக்கி தாக்குதல் : 3 பேர் சாவு…

Indian consulate in western Afghanistan main city near the border with Iran was attacked காபுல், மே 23- ஆப்கானிஸ்தானில் உள்ள ஹேரட் நகரில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மீது இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கி தாக்குதல் நடத்தினார்கள். நவீன துப்பாக்கிகளை ஏந்திவந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் இந்திய தூதரகத்தின் மீது சரமாரியாக துப்பாகியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள். இந்த துப்பாக்கி தாக்குதலில் உண்டான சேதம் பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகாத நிலையில், தூதரகத்தை சேர்ந்த பணியாளர்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், நிலைமையை இந்திய வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறியுள்ளார். மேலும், தூதரகத்தினுள் நுழைய…

Read More

லஞ்சம் வாங்கிய கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் கைது

Revenue inspector of Kelambakkam was arrested by Directorate of Vigilance & Anti-Corruption sleuths சென்னை,மே.21 காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருக்கும் திருப்போரூர் ஒன்றியத்தில் பட்டிபுலம் எனும் ஊரை அடுத்து உள்ள புது இடையூர் குப்பம் எனும் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த தனியார் பள்ளிக்கூட நிர்வாகம் சுமார் 3 ஆண்டுகளுக்கு ஓர் முறை பள்ளிக்கூட கட்டிடங்களுக்கு (NOC) தடையில்லா சான்றிதழ் எனும் அனுமதிசான்றிதல் புதுப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டும் ஆய்வு நடத்தி பள்ளிக்கு அனுமதிச்சான்று வழங்கக்கோரி பள்ளிக்கூட நிர்வாகி கண்ணன் திருப்போரூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்து இருந்தார். இதுசம்பந்தமாக பள்ளிக்கட்டிடங்களை ஆய்வுசெய்து அறிக்கை வழங்கும்படி கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் மணிவண்ணனுக்கு தாசில்தார் ஆறுமுகம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேரில் ஆய்வு செய்த மணிவண்ணன், அனுமதி சான்றிதழ் வழங்காமல் காலதாமதம் செய்துவந்தார். இதுகுறித்து பள்ளிக்கூட நிர்வாகி…

Read More

தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் தோப்பூர் வெங்கடாசலத்திற்கு மாரடைப்பு… மருத்துவமனையில் அனுமதி

Tamil Nadu Environment Minister Thoppu N D Venkatachalam was admitted to a private hospital here today after he complained of uneasiness. தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தோப்பூர் வெங்கடாச்சலம் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமது சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பெருந்துறைக்கு அமைச்சர் தோப்பூர் வெங்கடாசலம் சென்றிருந்தார். திடீரென நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக கோவையில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Tamil Nadu Environment Minister Thoppu N D Venkatachalam was admitted to a private hospital in coimbatore

Read More

இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கை துவக்கம். பொதுநலவாய அமைப்புக்கான நிதியை கனடா நிறுத்தியது..

Canada suspended $20 million in funding to the Commonwealth while the chair of the secretariat is occupied by Sri Lanka. மனித உரிமைகள் மீறல் விவகாரம் காரணமாக இலங்கைக்கான பொதுநலவாய அமைப்பு நிதியை தாம் இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கின்ற காலப்பகுதிக்கே இந்த நிதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்புக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க கனடா திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த நிதி சிறுவர் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது. Canada suspended $20 million in funding to the Commonwealth while the chair of the secretariat is occupied by Sri Lanka.…

Read More

காஞ்சிபுரம் பறக்கும் படை தேர்தல் அதிகாரிகள் நேற்று வாகன சோதனை : காரில் கொண்டு சென்ற ரூ.39 லட்சம் பறிமுதல்

காஞ்சிபுரம் பறக்கும் படை தேர்தல் அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் காரில் கொண்டு சென்ற ரூ.39 லட்சம் பறிமுதல்.. காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கி கார் ஒன்று சென்றது. அந்த காரை சோதனை செய்தபோது, இந்திய மதிப்பில் ரூ.39 லட்சம் வெளிநாட்டு கரன்சி இருப்பது தெரிந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, யுஏஇ எக்ஸ்சேஞ்ச் என்ற வெளிநாட்டு பணம் மாற்றம் செய்யும் நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும், காஞ்சிபுரத்தில் உள்ள கிளை அலுவலகத்தில் இருந்து கொண்டு செல்வதாகவும் தெரிந்தது. மேலும் காரில், அந்நிறுவனத்தின் துணை மேலாளர் பாலாஜி என்பவர் உள்பட 3 பேர் இருந்தனர். Kanchipuram flying squad இதுபற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காஞ்சிபுரம் கலெக்டர் பாஸ்கரன், எஸ்பி விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.  டிஎஸ்பி பாலச்சந்தர் விசாரித்தார். பின்னர், அந்த கரன்சிகளை பறிமுதல் செய்து…

Read More

இலங்கைக்கு இங்கிலாந்து பிரதமர் கெடு. திமிர் பதில் கொடுத்த ராஜபக்சே

Britain Prime Minister David Cameron has set Sri Lanka a March 2014 deadline to address shortcomings on human rights related issues விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு, சுதந்திரமான விசாரணை ஆணையத்தை மார்ச் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கெடு விதித்துள்ளார். அவ்வாறு செய்யவில்லையெனில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை நாடி, சர்வதேச விசாரணையை பிரிட்டன் கோர நேரிடும் என்றும் இலங்கையை அவர் எச்சரித்துள்ளார். காமன்வெல்த் மாநாட்டிற்கு இடையே போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமையன்று சென்ற கேமரூன், அங்குள்ள தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு, வெள்ளிக்கிழமை அன்று இரவே அந்நாட்டு அதிபர் ராஜபட்சவை அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்கு பின்னர்…

Read More

சவுதியில் பாகிஸ்தானிய ஹெராயின் கடத்தல்காரனின் தலை துண்டிப்பு

Saudi Arabia authorities beheaded a Pakistani smuggler on wednesday சவுதிஅரேபியாவில் ஹெராயின் எனும் போதை பொருளை கடத்தல் செய்த குற்றத்திற்காக ஒரு பாகிஸ்தானிய கடத்தல் காரனின் தலை வெட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அரபு நாடான சவுதி அரேபியாவில் கொலை, கற்பழிப்பு, ஆயுதம் ஏந்திய கொள்ளை, போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் உபயோகித்தல் போன்றவைகள் கடுமையான குற்றங்களாக கருதப்பட்டு வருகிறது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனையாக தலையை தனியாக வெட்டியெடுத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த வகையில், கடந்த ஆண்டில் மட்டும் 76 பேர்களை மரணதண்டனை குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தலை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானிய கடத்தல் காரன் ஒருவன் ஏராளமான ஹெராயின் எனும் போதைப்பொருளை சவுதிக்கு கடத்தி வந்த குற்றத்திற்காக தலையை தனியாக வெட்டியெடுத்து மரண…

Read More