லஞ்சம் வாங்கிய கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் கைது

Revenue inspector of Kelambakkam was arrested by Directorate of Vigilance & Anti-Corruption sleuths

சென்னை,மே.21 காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருக்கும் திருப்போரூர் ஒன்றியத்தில் பட்டிபுலம் எனும் ஊரை அடுத்து உள்ள புது இடையூர் குப்பம் எனும் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த தனியார் பள்ளிக்கூட நிர்வாகம் சுமார் 3 ஆண்டுகளுக்கு ஓர் முறை பள்ளிக்கூட கட்டிடங்களுக்கு (NOC) தடையில்லா சான்றிதழ் எனும் அனுமதிசான்றிதல் புதுப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டும் ஆய்வு நடத்தி பள்ளிக்கு அனுமதிச்சான்று வழங்கக்கோரி பள்ளிக்கூட நிர்வாகி கண்ணன் திருப்போரூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்து இருந்தார்.

Revenue inspector of Kelambakkam was arrested by Directorate of Vigilance & Anti-Corruption sleuths

இதுசம்பந்தமாக பள்ளிக்கட்டிடங்களை ஆய்வுசெய்து அறிக்கை வழங்கும்படி கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் மணிவண்ணனுக்கு தாசில்தார் ஆறுமுகம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேரில் ஆய்வு செய்த மணிவண்ணன், அனுமதி சான்றிதழ் வழங்காமல் காலதாமதம் செய்துவந்தார். இதுகுறித்து பள்ளிக்கூட நிர்வாகி கண்ணன், மணிவண்ணனை தொடர்புகொண்டு கேட்டபோது ரூ.2 ஆயிரம் கொடுத்தால் தான் அனுமதி சான்று வழங்க முடியும் என்று கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து பள்ளிக்கூட நிர்வாகி கண்ணன் சென்னை நந்தனம் நகரப்பிரிவு 2-ல் உள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை அலுவலகத்திற்கு சென்று தகவல் தெரிவித்தார். இதுபற்றி விசாரித்த துணைசூப்பிரண்டு ஜீவானந்தம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கண்ணனிடம் கொடுத்து வருவாய் ஆய்வாளரை பொறிவைத்து பிடிக்க திட்டமிட்டனர்.

கேளம்பாக்கத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்ற கண்ணன், அங்கிருந்த வருவாய் ஆய்வாளர் மணிவண்ணனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை துணைசூப்பிரண்டு ஜீவானந்தம் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், அசோக்குமார், உமாராணி ஆகியோர் வருவாய் ஆய்வாளரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரம் லஞ்சப்பணம் கைப்பற்றப்பட்டது. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வருவாய் ஆய்வாளர் மணிவண்ணனை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Revenue inspector of Kelambakkam was arrested by Directorate of Vigilance & Anti-Corruption sleuths

CHENNAI: Directorate of Vigilance & Anti-Corruption sleuths on Tuesday arrested a revenue inspector at Kelambakkam for demanding and accepting INR 2,000/- as bribe from a school correspondent. Mr.K Kannan, a resident of Pudu Edaiyur Kuppam near Mahabalipuram, has been running J K Nursery and Primary School at Mahabalipuram. He approached revenue officials at Kelambakkam to get his school licence renewed. Revenue inspector A Manivannan asked him to pay Rs 2,000 as bribe to process his files. Following this, Kannan lodged a complaint with the DVAC officials. As instructed by the vigilance officials, he told Manivannan that he would pay the amount on Tuesday morning. Vigilance officials waited outside the revenue inspector’s office and caught Manivannan red-handed when he accepted the money. He was remanded in judicial custody after being produced before a magistrate court in Chengalpet.

Revenue inspector of Kelambakkam was arrested for demanding and accepting bribe from school correspondent by Directorate of Vigilance & Anti-Corruption sleuths DVAC

Related posts