ஜி.கே.வாசன் தலைமையில் புதிய கட்சி ???. 'தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்' தொடக்கம்???

Former Central Minister G K Vasan Plans to starts a New political Party

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி கொடுக்காவிட்டால் “தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்” எனும் பெயரில் புதிய கட்சியை நிறுவ முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஜி.கே.வாசன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சி மேலிடம் வற்புறுத்தியும் தான் போட்டியிட முடியாது என கூறி மறுத்துவிட்டார். அதனால் காங்கிரஸ் தலைமை அவர் மீது அதிருப்தியாக இருந்தது. அந்த அதிருப்தியை தணிக்கும் வகையில் கட்சிக்காக சூறாவளி சுற்று பயணம் செய்து கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். எனினும் அது எதுவும் பலன் தரவில்லை. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து, 38 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது.

Former Central Minister G K Vasan Plans to starts a New political Party
New political Party planned to be start by Former Central Minister G K Vasan

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில், இப்போது பூசல் கிளம்ப ஆரம்பித்து விட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து, திரு.ஞானதேசிகனை நீக்க கோரி பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர் ஒருவர், முதல் குரல் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதன் பின்னணியில் சிதம்பரம் அணியினர் இருகிறார்கள் என்றும், விரைவில் இது பூதாகரமாக ஆகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே திருநாவுக்கரசர் தலைவராகக்கூடும் என்ற பேச்சு, அடிபட்ட போது, வாசன் அணியினர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் மாற்றம் கொண்டு வந்தால், அதில் தலைவர் பதவி ஜி. கே வாசனுக்கே வழங்க வேண்டும் என்று, வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு மேலிடம் சம்மதிக்காவிட்டால், தனி கட்சி ஒன்றை தொடங்க ஜி கே வாசன் தயாராக உள்ளார் என்று அவரது ஆதரவாளர்கள் பேச துவங்கி விட்டார்கள்.

இது சம்பந்தமாக, அவருடைய முக்கிய ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க ஒரே வழி ஜி கே வாசனை தலைவராக்குவது தான். இந்த மோசமான காலகட்டத்தில், காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் அவரால் மட்டும் தான் கட்டியெழுப்ப முடியும். இதை தலைமை புரிந்து கொள்ளும் என்று, நம்புகிறோம். இதில் தலைமைக்கு மாறுபட்ட கருத்து இருக்குமேயானால், நாங்கள் தனித்து செயல்படும் முடிவுக்கு சென்றுவிடுவோம் தள்ளப்படுவோம்.

 மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை  ஜி.கே.வாசனுக்கு கொடுக்காவிட்டால் “தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்” எனும் பெயரில் புதிய கட்சியை நிறுவ திட்டமிட்டுள்ளோம் என ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

English Summary :

Former Central Minister G K Vasan Plans to start a New political Party in the name of Kamaraj if the Tamilnadu congress leadership is not offered.

Former Central Minister G K Vasan Plans to start a New political Party

Mean while Trouble is brewing in the Congress party following the drubbing it received in the just concluded general elections with former state president and Pollachi candidate K Selvaraj seeking the removal of the current state president B S Gnanadesikan.

Related posts