அர்விந்த் கெஜ்ரிவாலின் சர்வாதிகார போக்கு : ராகேஷ் அகர்வால்

Delhi: Mr.Rakesh Agarwal a Senior leader of Aam Aadmi Party criticized Arvind Kejriwal that he   is a dictator in Aam Aadmi Party publicizing himself alone. In delhi only pictures of  Arvind Kejriwal can be found acting like proprietor of Aam Aadmi Party

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியினுடைய நிறுவனரும் தலைவருமான திரு.அர்விந்த் கெஜ்ரிவால் கட்சியில் ஓர் சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறார் என்று அந்த கட்சியின் முக்கிய தலைவர் திரு.ராகேஷ் அகர்வால் குற்றம் சாட்டியுள்ளார்.

kej

திரு.அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அவரது கட்சியை சார்ந்த திரு.ராகேஷ் அகர்வால் ஓர் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் “உங்களை மட்டுமே நீங்கள் முன்னிலைப்படுத்திக் கொண்டு கட்சிக்குள் ஓர் சர்வாதிகாரி போக்கை கடைபிடிக்கிறீர்கள். உங்களது பெயர் மற்றும் படத்தை தவிர்த்து வேறு அதையும் கட்சியின் சார்பாக எதையும் தலைநகர் டெல்லியில் காண முடியவில்லை.

அரசியல் முன் அனுபவம் ஏதும் இல்லாத அரசியல் கட்சியாக “ஆம் ஆத்மி” கட்சி செயல்படுகிறது. இந்த முக்கிய காரணத்தினால் வாக்கு வங்கி அரசியல் செல்வாக்குக்கு “ஆம் ஆத்மி” கட்சி பலியாகிவிட்டது என்று கூறியிருந்தார்.

இதனால் கோபம் அடைந்த “ஆம் ஆத்மி” கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள், இன்று டெல்லியில் நடத்த இருந்த ராகேஷ் அகர்வால் – செய்தியாளர் சந்திப்பு அறைக்குள் சென்று தகராறில் மற்றும் அமளியில் ஈடுபட்டார்கள்.

Mr.Rakesh Agarwal a Senior leader of Aam Aadmi Party criticized Arvind Kejriwal that he   is a dictator in Aam Aadmi Party publicizing himself alone. In delhi only pictures of  Arvind Kejriwal can be found acting like proprietor of Aam Aadmi Party

Mr.Rakesh Agarwal said that due to lack of political experience, the whole effort of the party cadres is being wasted and all the votes have been gone to vote banks already.

Related posts