சென்னை ஐகோர்ட்டில் பி.என். சீனிவாசன் 2006–ம் ஆண்டு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலை– டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசன் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதை அகற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி சத்ய நாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சீனிவாசன் தாக்கல் செய்த மனுவுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் துணை கமிஷனர் கே. சவுந்தரராஜன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறிஇருப்பதாவது:–
காமராஜர் சாலை– டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனின் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் இருந்து வலப்புறமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்கு திரும்பும் வாகன ஓட்டிகளுக்கும், அதே போல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து வலப்புறமாக சாந்தோம் நெடுஞ்சாலைக்கும் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இந்த சிலை இடையூறாக அமைந்துள்ளது.
மேலும் காமராஜர் சாலையை கடக்கும் பாதசாரிகளை இந்த சிலை மறைத்து விடுவதால் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.
இந்த சிலை வாகனத்தில் செல்பவர்களுக்கு இடையூறாக இருப்பதால் 2012 ஆண்டில் 12 விபத்துக்களும், இந்த ஆண்டில் 8 விபத்துக்களும் நடந்துள்ளது. இந்த சிலை அகற்றப்பட்டால் வாகனத்தில் செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.
சிவாஜி கணேசன் மிகப்பெரிய நடிகர் என்பதால் அவரது சிலையை மெரினா கடற்கரையில் முன்பக்கம் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலையோடு இவரது சிலை வைத்தால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்காது. எனவே இந்த வழக்கில் ஐகோர்ட்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இதையடுத்து இந்த வழக்கை டிசம்பர் 13–ந்தேதி நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
The statue of late cine actor, Sivaji Ganesan, at the junction of Kamarajar Salai and Radhakrishnan Salai, is in the news again.
A petitioner had gone to the Madras High Court opposing the erection of the statue at that junction. He said the structure obstructed the vision of motorists who wished to turn into Radhakrishnan Salai from Kamarajar Salai.
On Wednesday, the First Bench, comprising acting Chief Justice R.K. Agrawal and Justice M. Sathyanarayanan, directed the jurisdictional assistant commissioner of police (Traffic) to file an affidavit in this regard. It posted the matter for further hearing on November 13.
The eight-feet-tall bronze statue was unveiled on July 21, 2006.
The petition was filed by P.N. Srinivasan in 2006 seeking to restrain the authorities from permitting the erection of the statue at the Kamarajar Salai-Radhakrishnan Salai intersection, opposite Gandhi Statue, and consequently direct the authorities to provide an alternative place for the statue.
When the matter came up seven years ago, the court declined to restrain the State government from unveiling the statue. Adjourning the matter, the court however said it was giving time to enable the government to approach the Supreme Court for appropriate orders, directions or clarifications with regard to an undertaking given by the government in 2002 that no permanent or temporary traffic hindrance would be created on any road.
Now, when the matter came up before the First Bench, advocate-general A.L. Somayaji said, on account of installation of the statue, there was no obstruction to the free flow of traffic.
The petitioner’s counsel R. Gandhi said there could not be a statue on the road. The statue hindered the vision of motorists who wanted to take a right turn from Kamarajar Salai to go on Radhakrishnan Salai. Following this, the Bench issued the direction to the assistant commissioner of police, traffic.