காஞ்சிபுரத்தில் ராகிங் கொடுமைக்கு மருத்துவ கல்லூரி மாணவன் பலி

senior students Ragging lead to Medical collage student suicide in hostel  சென்னை: மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது, காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் அதிகாரியின் நேர்முக உதவியாளர் முருகன். இவரது மனைவி சாவித்திரி ஜெகதேவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர்களுக்கு 4 மகன்கள் 3வது மகன் முகில்ராஜ்குமார் (18). இவர் காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் மீனாட்சி மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாண்டு படித்தார், முதலாண்டு மாணவர்களுக்கான கல்லூரி விடுதியில் இடமில்லை என்பதை காரணம் காட்டி, 3ம் ஆண்டு மாணவர்கள் 5 பேருடன் முகில்ராஜ்குமார் தங்க வைக்கப்பட்டார்.விடுதியில் சேர்ந்த 2வது நாளில் இருந்தே முகில் ராஜ்குமார் ராகிங் கொடுமைக்கு ஆளானதாக கூறப்படுகிறது. senior students Ragging lead to Medical collage…

Read More காஞ்சிபுரத்தில் ராகிங் கொடுமைக்கு மருத்துவ கல்லூரி மாணவன் பலி

அமெரிக்கவில் வசித்து வந்த இந்திய பெண்ணை காரால் மோதி 5 கி.மீ. இழுத்து சென்று கொலை

Indian-American woman dragged for 5 KMs, dies அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய பெண்ணும் அவரது கணவரும் ஒரு அமெரிக்க வாலிபரால் தாக்கப்பட்டனர். இதில், அந்த வாலிபரின் காரில் சிக்கிகொண்ட இந்திய பெண் சுமார் 5 கி.மீ. இழுத்து செல்லப்பட்டதால், பரிதாபமாக பலியானார்.   காஞ்சன்பென் பட்டேல் என்னும் 58 வயது பெண்ணை அமெரிக்காவை சேர்ந்த மோசஸ் அக்லோக் என்னும் 22 வயது இளைஞர் அவரது காரில் இடித்து, தனது வாகனத்தில் சுமார் 5 கி.மீ. இழுத்துச் சென்றதில் அப்பெண் பலியானார்.  அமெரிக்காவின் மாசசுசெட்ஸில் உள்ள ஒரு மோட்டலுக்கு மோசஸ் அவரது நண்பரோடு வந்து தங்கியுள்ளார். அங்கு அண்மையில் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியரான காஞ்சன்பென் பட்டேலும் அவரது கணவரும் வேலை பார்த்து வந்தனர்.   இந்நிலையில் மோசஸ் தங்கியிருந்த அறைக்கு வாடகை கொடுக்காதது தொடர்பாக…

Read More அமெரிக்கவில் வசித்து வந்த இந்திய பெண்ணை காரால் மோதி 5 கி.மீ. இழுத்து சென்று கொலை

அமெரிக்காவில் ஒன்றரை வயது மகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தந்தை

Man posts photos of daughter on Facebook moments before killing her, then shoots self அமெரிக்காவில் ஒன்றரை வயது மகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தந்தை ஒருவர் தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலராடோவை சேர்ந்த 22 வயதான மெர்ரிக் மேக்கோய் என்ற நபருக்கும் அவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அவர் ஒன்றரை வயது பெண் குழந்தையை மெர்ரிக்கிடம் விட்டுவிட்டு வீட்டைவிட்டே வெளியேறினார். இதனால் மனமுடைந்துப்போன மெர்ரிக், அவர் குழந்தையுடன் இருக்கும் படங்களை சமூக வலைதளமான பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார், பேஸ்புக்கில், அவரது மனைவிக்கு ஒரு செய்தி தெரிவித்திருந்தார். அதில், ‘நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது என நான் உன்னிடம் கூறியிருக்கிறேன்’ என குறிப்பிடபட்டிருந்தது.  இதற்கு பிறகு ஒன்றரை வயது குழந்தையுடன் தனியாக இருந்த மெரிக்கின் வீட்டில்…

Read More அமெரிக்காவில் ஒன்றரை வயது மகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தந்தை

பெல்ஜியத்தில் ஒரு வருடமாக இறந்து போன கணவரின் சடலத்தோடு வாழ்ந்த மூதாட்டி

Widow Sleeps With Dead Husband Decomposing Corpse for a Year After his Death in belgium பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மூதாட்டி ஒருவர் அவரது கணவரின் சடலத்தோடு ஒரு வருட காலம் வாழ்ந்துவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புரூசெல்ஸ்ன் புறநகர் பகுதியில் வயதான தம்பதி வசித்து வந்தனர்.  79 வயதான கணவர் மார்சல் ஆஸ்துமா காரணமாக இறந்துவிட, அவரது மனைவி அவர் கணவரின் மரணம் குறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு வாடகை தராத காரணத்தினால், வீட்டின் உரிமையாளர் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில், வீட்டில் இருப்போரை விசாரிக்க வந்த காவல்துறையினர் அவர்கள் கண்ட காட்சி திடுக்கிட செய்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இறந்துப்போன கணவரின் உடலை அவரது மனைவி படுக்கை மீது போட்டுவைத்திருந்தார். இதனால் அதிர்ச்சி…

Read More பெல்ஜியத்தில் ஒரு வருடமாக இறந்து போன கணவரின் சடலத்தோடு வாழ்ந்த மூதாட்டி

இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து நடிகை அஞ்சலிக்கு விலக்கு

Tamil actress Anjali  : The Madras High Court ordered that it is not necessary for tamil actress Anjali to appear for the hearing of director Kalanjiam defamation case in the court சென்னை: இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து நடிகை அஞ்சலிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் அஞ்சலி. தன் சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால், தமிழ்நாட்டை விட்டு வெளியேறி சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு சில மாதங்களுக்கு முன் சென்றுவிட்டார். இன்று வரை சென்னை திரும்பவே இல்லை. தான் வெளியேறியது ஏன் என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த நடிகை அஞ்சலி, தன் சித்தி பாரதிதேவி, இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கூறி பரபரக்க வைத்தார். இதையடுத்து, அஞ்சலி மீது…

Read More இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து நடிகை அஞ்சலிக்கு விலக்கு

இன துவேசம் செய்யப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியருக்கு ரூ31,25,500 லட்சம் நஷ்ட ஈடு: அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

Sikh man to get $50,000 in religious discrimination case தாடி வைத்திருந்ததன் மூலம் சீக்கியர் என அடையாளம் கண்டு கொண்ட அமெரிக்கக் கார் நிறுவனம் ஒன்று, வேலை வேண்டி வந்தவருக்கு தாடியை எடுத்தால் வேலை தருவதாக நிபந்தனை விதித்தது. இதனை எதிர்த்து சம்பந்தப்பட்ட சீக்கியர் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ31,25,500 லட்சம் இழப்பீடு கிடைத்துள்ளது.  அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சா வழியை சேர்ந்த சீக்கியர் குர்ப்ரீத் கெர்ஹா. இவர் நியூஜெர்சி நகரில் உள்ள கார் டீலரிடம் வேலை வேண்டிச் சென்றார். நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்ற கெர்ஹாவுக்கு, அந்த நிறுவனம் ஒரு முக்கிய நிபந்தனை விதித்தது. அதாவது, அவர், தனது தாடியை நீக்கிவிட்டு உடனடியாக பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்பது தான் அது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கெர்ஹா, தன் மத சம்பிரதாயங்களை மீறியவகையில் தாடியை எடுக்க…

Read More இன துவேசம் செய்யப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியருக்கு ரூ31,25,500 லட்சம் நஷ்ட ஈடு: அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

உலகில் 250 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை : உலக வங்கி ஆய்வறிக்கை

250 crore of people in this world live without toilet facility சுமார் 60 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்று உலக வங்கி ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஐ.நா. சபை சார்பில் நவம்பர் 19-ம் தேதி கழிப்பறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் சுமார் 250 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. சுமார் 100 கோடி மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 53% வீடுகளில் கழிப்பறை இல்லை… இந்தியாவில் சுமார் 60 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. அதாவது சுமார் 53 சதவீத வீடுகளில் கழிப்பறை இல்லை. கழிப்பறை வசதி தொடர்பாக இந்தியக் குழந்தைகளிடம் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், முதலாம் வயது பருவத்தில் சுகாதாரமான கழிப்பறை வசதியைப்…

Read More உலகில் 250 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை : உலக வங்கி ஆய்வறிக்கை

ஆப்பிரிக்க நாட்டு போதை பொருள் கடத்தல்காரன் மும்பையில் பலி.. வயிற்றுக்குள் மறைத்துவைத்திருந்த மருந்து வெடித்தது

Drug pill bursts in tummy, kills smuggler ஆப்பிரிக்க நாடு போதை பொருள் கடத்தல் காரன் மும்பையில் பலி.. வயிற்றுக்குள் மறைத்துவைத்திருந்த மருந்து வெடித்தது   : மும்பை விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆப்பிரிக்க நாட்டவரின் வயிற்றில் அவர் கடத்தி வந்திருந்த போதைப்பொருள் கேப்சியூல் வெடித்ததால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே பலியானார். ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டைச் சேர்ந்த 2 வாலிபர்கள் விமானம் மூலம் மும்பை வந்தனர். அவர்கள் இருவரும் போதை மருந்து கடத்தி வருவதாக மும்பை குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் இருவரின் உடமைகளை சோதனையிட்டனர். எதுவும் சிக்கவில்லை.  பிறகு அவர்களிடம் மேற்கொள்ளபட்ட விசாரணையில், அவர்கள் தோள் பட்டை வலிக்கு சிகிச்சை பெற வந்தாக தெரிவித்தார்கள். ஆனால் அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவர்கள் வயிற்றில் போதை மருந்து கடத்தி…

Read More ஆப்பிரிக்க நாட்டு போதை பொருள் கடத்தல்காரன் மும்பையில் பலி.. வயிற்றுக்குள் மறைத்துவைத்திருந்த மருந்து வெடித்தது

குஜராத் நீதிமன்றத்தில் நீதிபதி மீது செருப்பை விட்டெறிந்த கொலைக்குற்றவாளி

Murder accused hurls shoe at judge, abuse him in courtroom குஜராத் நீதிமன்றத்தில் நீதிபதி மீது செருப்பை விட்டெறிந்த கொலைக்குற்றவாளி : குஜராத் மாநிலம் பூஜ் கோர்ட்டில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. கொலைக்குற்றவாளி ஒருவர் நீதிபதி மீது ஷூவை கழட்டி வீசியடித்தது பெரும் பரபரப்புக்குள்ளானது. மேலும் நீதிபதியை கடுமையாக தகாத வார்த்தைகளால் அவர் ஏசியதாகவும் அருகிலிருந்த போலீஸ் தரப்பு கூறியுள்ளது. ஆனால் நல்லவேளையாக ஷூ ஜட்ஜ் மீது படவில்லை. அந்த நீதிபதியின் பெயர் எம்.டி. ஆச்சார்யா, இவர் கொலைக்குற்றவாளியின் வழக்கில் தீர்ப்பு வழங்கயிருந்தபோது இந்த ஷூ வீச்சு நடந்தது. ஷூ வீசிய கொலைக்குற்றவாளி பெயர் கசம் அகமட், இவர் 2010ஆம் ஆண்டு தனது நெருங்கிய உறவினர் ஒருவரை கொலை செய்ததாக வழக்கு நடைபெற்றது. ஷூ வீச்சினால் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. தீர்ப்பு கூறும் முன்னர் ஷூ வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதோடு மட்டுமல்லாது…

Read More குஜராத் நீதிமன்றத்தில் நீதிபதி மீது செருப்பை விட்டெறிந்த கொலைக்குற்றவாளி

நவம்பர் 21 உலக தொலைக்காட்சி தினமக அனுஷ்டிக்கப்படுகிறது

Today marks World Television Day உலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியின் முக்கியத்துவம் இந்தத் தினத்தில் எடுத்துச் சொல்லப்படுகிறது.1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21ம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. இதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டது. உலகின் தொழிநுட்ப வளர்ச்சியின் பரிமாணத்தில் பல மின்சாதனப் பொருட்கள் மனிதர்களிடத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் அவை ஒவ்வொன்றும் மனிதனின் ஒவ்வொரு தேவையை ப+ர்த்தி செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் மனிதனை ஓரிடத்திலிருந்து உலகில் மூலை முடுக்கெங்கும் கொண்டு சென்று கண் முன்னே உள்ள தொழிநுட்ப சாதனம் மூலம் காட்டுவதே தொலைக்காட்சி ஆகும். இந்த…

Read More நவம்பர் 21 உலக தொலைக்காட்சி தினமக அனுஷ்டிக்கப்படுகிறது