2 year old girl child killed brutally in Srivilliputhur over the vengeance of illegal contact of the child’s father with his neighbor
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலையில் தொடர்புடைய கணவன் மனைவியை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தார்கள். மேலும் இந்த கொலையில் தொடர்புள்ளவர்கள் பற்றி காவல்துறையினர் தீவிர புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாள்பட்டியின் கீழத்தெருவைச் சார்ந்தவர் திரு. எஸ்.கண்ணனுடைய மகன் திரு.சங்கர். திரு.சங்கர்,அங்குள்ள மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி ஒன்றின் வேன் நடத்துனர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் திருமதி.செல்வி. இந்த தம்பதியருக்கு கருப்பசாமி (வயது 5) என்ற மகனும், இந்து காவியா (இரண்டே முக்கால் வயது) என்ற மகளும் உண்டு. கருப்பசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியின் திரு.வி.க. தொடக்கப்பள்ளியி்ல 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி இந்து காவியாவை சனி இரவு காணவில்லை என அவரது தாய் செல்வி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினர் அவர்களை நன்றாக தேடிபார்க்குமாறு அவர்களை திருப்பி அனுப்பியதாக கூறபடுகிறது. மேலும் இது குறித்து கேபிள் டி.வி.யில் விளம்பரம் கொடுங்கள் என கூறி அனுப்பியுள்ளார்கள்.
இதனிடையே ஞாயிறு அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் – கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பூவாணி விலக்கு பகுதியை அடுத்து ஓர் கல்குவாரியை ஒட்டி செல்லும் சாலை ஓரத்தில் ஓர் சிறுமியினுடைய சடலம் எரிந்து கருகிய நிலையில் கிடந்தது காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சங்கரைக் கூட்டிச் சென்று அந்த சடலத்தை காட்டினர். அது தன்னுடைய மகள் தான் என அவர் அடையாளம் காட்டினார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு தடயவில் நிபுணர்கள் மற்றும் விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். எல்லா தடயங்கள் சேகரிக்கப்பட்டது. சங்கருக்கும் பக்கத்து வீட்டில் விதவை பெண் அகிலாவிற்கும் தவறான உறவு இருந்துள்ளது. விதவை அகிலா தற்பொழுது நாகராஜ் என்ற வாகன ஓட்டுனரை திருமணம் செய்துள்ளாராம். இந்த வேளையில் சங்கர், அகிலாவின் வீட்டிற்குச் சென்று வருவது தொடர்பாக செல்வி அகிலாவின் வீட்டில் சண்டை போட்டுள்ளார். மேலும் சங்கரும், உன் வீட்டிற்கு தினம் பல பேர் வந்து செல்கிறார்கள் என்று கூறி பேசியுள்ளார். இதன் அடிப்படையில் ஏற்பட்ட விரோதத்தில் அகிலா, சங்கரின் குடும்பத்தை பழிவாங்க எண்ணி இருந்துள்ளார்.
2 year old girl child killed brutally in Srivilliputhur over the vengeance of illegal contact of the child’s father with his neighbor
சனிக்கிழமை மாலை எப்போதும் போல் அகிலாவின் வீட்டிற்கு குழந்தை இந்து காவியா விளையாடச்சென்றபோது அகிலா குழந்தையின் கழுத்தை நெரித்து, தலையணையால் அமுக்கி கொன்றுள்ளார். இது பற்றி கணவர் நாகராஜூடம் தகவல் தர அவர் அங்கு வந்து, குழந்தை இந்து காவியாவை அங்குள்ள சிலருடன் சேர்ந்து எடுத்துச் சென்று எரித்துள்ளது முதல் கட்ட காவல்துறை புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் அகிலா, நாகராஜ், அவரது நண்பர் செல்வம் மற்றும் ஆட்டோ டிரைவர் பேச்சிமுத்து ஆகிய 4 பேரிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.
காவல்துறை அதகாரிகள் கூறுகையில், மேலும் தொடர்ந்து புலன் விசாரணை நடைபெறுகிறது. இதில் யார் எந்த வாகனத்தில் கொண்டு சென்று குழந்தையை எரித்தார்கள் என்பது பற்றியும் விசாரணையின் இறுதியில் தெரிய வரும் என்றார்கள்.
பின்னர் இது பற்றி கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் விழுப்பனூர் கிராம நிர்வாக அலுவலர் திரு.சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.