Scientists find evidence of granite on Mars செவ்வாய் கிரகத்தில் கிரானைட் கற்கள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு பின்னர் உயிரினங்கள் வாழ சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ள கிரகமாக கருதப்படுவது செவ்வாய் கிரகம். ஒருபக்கம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற பிரத்யேக திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், உலக நாடுகள் செவ்வாய் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ள விண்கலங்களை அனுப்பிவைத்துக்கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இந்தியாவும் மங்கல்யான் என்னும் விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியுள்ளது. இது அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாயை அடையுமென தெரிகிறது. இந்நிலையில் செவ்வாயில் நிலபரப்புகளை குறித்து ஆய்வு மேற்கொள்ள ஏற்கனவே நாசாவால் அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி ரோவர் என்னும் விண்கலம், அங்கு கிரானைட் இருப்பதாக தகவல்களை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆதாரத்தை ‘நாசா’ மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கிரானைட்டில் இருக்கும் பிளட்ஸ்பர் என்னும்…
Read More செவ்வாய் கிரகத்தில் கிரானைட் கற்கள் : நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தகவல்நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா கொடுக்க கூடாது என அமெரிக்க எம்.பி பார்லிமெண்டில் தீர்மானம்.
American MP Keith Ellison called on a Resolution in American parliament to continue denying visa to Narendra Modi by US government வாஷி்ங்டன்: அமெரிக்க பார்லிமெண்ட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவிற்குள் நுழைய விசா வழங்கக் கூடாது என்று, அமெரிக்க எம்.பி யான., கெய்த் எலிசன், தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளார். அந்த தீர்மானத்தில், இந்தியாவி்ல் இருக்கும் சிறுபான்மையினர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு முதல் நரேந்திர மோடிக்கு, விசா தர அமெரிக்கா மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. கெய்த் எலிசன், ஜனநாயக கட்சி சார்பில் ‘மின்னசோட்டா’ வில் வெற்றி பெற்றவர். முஸ்லிம் மதத்தை சேர்ந்த இவர் தான் அமெரிக்க வரலாற்றில் செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம்மாகும். American MP Keith…
Read More நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா கொடுக்க கூடாது என அமெரிக்க எம்.பி பார்லிமெண்டில் தீர்மானம்.பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் மர்ம நபர் பெண் மீது அருவாள் தாக்குதல்
Caught on CCTV: woman attacked inside unguarded ATM in Bangalore பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற வங்கி பெண் அதிகாரியை, மர்ம நபர் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்துச் சென்ற காட்சி காணொளியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த ஜோதி உதய (37) .ஒரு தனியார் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை 7.10 மணி அளவில் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றார். இந்நிலையில் ஜோதி பணம் எடுக்கும்வரை காத்திருந்த மர்ம நபர் ஒருவர் சட்டென்று உள்ளே புகுந்து ஏ.டி.எம். ஷட்டரை கீழே இறக்கி பூட்டினார். அவரை பார்த்ததும் ஜோதி பயந்துபோய் வெளியே செல்ல முயன்றார். ஆனால் அவரை தடுத்து…
Read More பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் மர்ம நபர் பெண் மீது அருவாள் தாக்குதல்சன் கிளாஸை பயன்படுத்தி ஐபோன் சார்ஜ் அமெரிக்க வாழ் இந்தியர் சாதனை
Indian designer Sayalee Kaluskar : Ray-Ban Shama Shades with solar panels would charge your iPhone இந்த விஞ்ஞான உலக மாற்றத்தில் ஒன்றாக மாற்று மின்சாரத்தின் தேவை பற்றி விழிப்புணர்வு அதிகரித்துவருகிறது. பலரும் பல்வேறு வித்தியாசமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அசத்தி வருகிறார்கள். ஏற்கெனவே அமெரிக்காவில் மனிதர்கள் நடப்பதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவி விற்பனையில் உள்ளது. மனிதர்களின் காலணிக்குள் இருக்கும் இந்த சின்னஞ்சிறு கருவி, நடக்கும் போது ஏற்படும் அழுத்தத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறது. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது சூரியப் படலத்தினைக் கொண்ட சன்கிளாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பகல் பொழுதில் படும் சூரியக்கதிர்கள் மூலம் கூலிங்கிளாசில் விசேசமாக பொருத்தப்பட்டுள்ள சோலார் பிரேமில் பட்டு ஸ்மார்ட் போனிற்கு சார்ஜ் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சார்ஜ் செய்யும் முறையை Sayalee Kaluskar என்ர அமெரிக்க வாழ…
Read More சன் கிளாஸை பயன்படுத்தி ஐபோன் சார்ஜ் அமெரிக்க வாழ் இந்தியர் சாதனைஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 வயது நிரம்பிய பெண் குழந்தை எரித்து கொலை
2 year old girl child killed brutally in Srivilliputhur over the vengeance of illegal contact of the child’s father with his neighbor விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலையில் தொடர்புடைய கணவன் மனைவியை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தார்கள். மேலும் இந்த கொலையில் தொடர்புள்ளவர்கள் பற்றி காவல்துறையினர் தீவிர புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாள்பட்டியின் கீழத்தெருவைச் சார்ந்தவர் திரு. எஸ்.கண்ணனுடைய மகன் திரு.சங்கர். திரு.சங்கர்,அங்குள்ள மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி ஒன்றின் வேன் நடத்துனர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் திருமதி.செல்வி. இந்த தம்பதியருக்கு கருப்பசாமி (வயது 5) என்ற மகனும், இந்து காவியா (இரண்டே…
Read More ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 வயது நிரம்பிய பெண் குழந்தை எரித்து கொலைமுட்டாள் அரசியல்வாதிகள் என பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் பரபரப்பு பேட்டி
Bharat Ratna awardee Scientist CNR Rao calls politicians ‘idiots’ addressing a press conference a day after the award was announced பிரதமரின் அறிவியல் ஆலோசனைகுழுவினுடைய தலைவர பொறுப்பில் இருக்கும் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும், கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த சச்சின் டெண்டுல்கருக்கும் இந்தியாவின் உயரிய விருதான “பாரத் ரத்னா” விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில், பெங்களூரில் சி.என்.ஆர். ராவ் பத்திரிகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, அறிவியல் ஆராய்ச்சியினுடைய தரம் ஏதும் குறைந்து இருக்கிறதா என்று ஓர் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய சி.என்.ஆர். ராவ், விஞ்ஞான ஆராய்ச்சிக்காக அரசு ஒதுக்கியுள்ள நிதியை ஒப்பிடும்போது அதைவிட வேகமாகமாகவும் அதிகமாகவும் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறோம். இந்த முட்டாள் அரசியல்வாதிகள், விஞ்ஞான…
Read More முட்டாள் அரசியல்வாதிகள் என பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் பரபரப்பு பேட்டிமூளைச்சாவு அடைந்த பெண்ணிக்கு பிரசவம் ஹங்கேரியில் சாதனை
Baby born after brain dead mother kept alive for three months மூளைச்சாவு அடைந்த பெண்ணிக்கு பிரசவம் ஹங்கேரியில் சாதனை : ஹங்கேரியில் ஒரு மூளைச்சாவு அடைந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை நவீன மருத்துவ முன்னேற்றத்தால் சுமார் 92 நாட்கள் வயிற்றிலே வளர்த்து பிரசவிக்கச் செய்து ஹங்கேரி நாட்டு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். பொதுவாக விபத்து மற்றும் சில உடல் நலக் கோளாறுகளினால் மூளைச்சாவு அடைபவர்களது உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்டு வருகிறது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் உறுப்புகளைக் கொண்டு பாதிக்கப் பட்ட 7 பேரின் வாழ்க்கையை ஒளியூட்டலாம் என்ற விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திடீர் மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் தகுந்த மருத்துவ வசதிகளுடன் சிகிச்சை அளித்து…
Read More மூளைச்சாவு அடைந்த பெண்ணிக்கு பிரசவம் ஹங்கேரியில் சாதனைமரத்தை மணம் முடித்து கொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்
environmental activist married a tree in Argentina சராசரியாக ஓர் மனிதன் நாள் ஒன்றுக்கு 3 சிலிண்டர்களின் அளவு ஆக்ஸிஜனை சுவாசம் செய்கிறான். தற்சமயம் ஓர் ஆக்ஸிஜன் சிலிண்டர் விலை ருபாய் 700/- ., 3 சிலிண்டர் விலை ருபாய் 2100/-. ஓர் வருடத்திற்கு ருபாய் 7,66,000/- க்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் ஓர் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 65 வருடம் எனில் ரூபாய் 5 கோடிக்கு மேல் போகிறது., இப்படி விலை உயர்ந்த, மதிப்பு கூடுதலான சுவாச காற்றை உயிரினங்களுக்காக இலவசமாக பச்சை மரங்கள் தருகின்றன. ஆக நாம் மரங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் மரங்கள் இயற்கை மனித இனத்திற்கும் என்னய்யா உயிர் இனங்களுக்கும் தந்த பொக்கிஷம் என்பதையும் மனிதர்கள் உணரும் விதத்தில் ஓர் புதிய முயற்சியை எடுத்தார் பெரு…
Read More மரத்தை மணம் முடித்து கொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்இறுதியாக ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா இந்திய கடற்படையில் சேர்ந்தது -வீடியோ இணைப்பு
India finally included INS Vikramaditya, after 9-years delay இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா நேற்று சேர்க்கப்பட்டதன் மூலம் இந்திய கடற்படையின் பலம் அதிகரித்துள்ளது. ரஷ்ய கடற்படையில் பாகு என்ற பெயரில் 1987ல் சேர்க்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல் பின்னர் அட்மிரல் கார்ஸ்கோவ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1995ல் இந்த கப்பல், ரஷ்ய கடற்படையிலிருந்து ஓரம் கட்டப்பட்டது. நட்பு நாடு என்ற அடிப்படையிலும், நம் ராணுவத்துக்கு தேவையான பெரும்பாலான ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியதாலும் அந்த கப்பலை, இந்தியாவுக்கு இலவசமாக வழங்குவதாக ரஷ்யா அறிவித்தது. இதன்படி அந்த கப்பலை இந்தியாவுக்கு ஏற்ப மாற்றியமைக்கவும், அதற்கான செலவுகளை இந்தியா ஏற்பது எனவும் முடிவானது. ரஷ்யாவின், செவ்மாஷ் கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. இதற்காக 9,300 கோடி ரூபாயை மத்திய அரசு…
Read More இறுதியாக ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா இந்திய கடற்படையில் சேர்ந்தது -வீடியோ இணைப்புஇலங்கைக்கு இங்கிலாந்து பிரதமர் கெடு. திமிர் பதில் கொடுத்த ராஜபக்சே
Britain Prime Minister David Cameron has set Sri Lanka a March 2014 deadline to address shortcomings on human rights related issues விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு, சுதந்திரமான விசாரணை ஆணையத்தை மார்ச் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கெடு விதித்துள்ளார். அவ்வாறு செய்யவில்லையெனில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை நாடி, சர்வதேச விசாரணையை பிரிட்டன் கோர நேரிடும் என்றும் இலங்கையை அவர் எச்சரித்துள்ளார். காமன்வெல்த் மாநாட்டிற்கு இடையே போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமையன்று சென்ற கேமரூன், அங்குள்ள தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு, வெள்ளிக்கிழமை அன்று இரவே அந்நாட்டு அதிபர் ராஜபட்சவை அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்கு பின்னர்…
Read More இலங்கைக்கு இங்கிலாந்து பிரதமர் கெடு. திமிர் பதில் கொடுத்த ராஜபக்சே

