சீனாவில் ஐ-போன் வாங்க ஆன்லைன் மூலம் குழந்தை விற்பனை

Chinese couple ‘sold their baby daughter to buy an iPhone’

Chinese couple 'sold their baby daughter to buy an iPhone'

நவீன தொழில்நுட்பத்தை கொண்ட ஐ-போன் மற்றும் ஐ-பேடுகளை வாங்க இன்றைய இளைஞர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதனால் சீன நாட்டில்  இருக்கும் இளைஞர்கள் தங்களது கிட்னியைக் கூட விற்று இத சாதனங்களை வாங்குவதாக பரவலாக பேசப்படுகிறது. இதையெல்லாம் விஞ்சும் வகையினில், சீனாவில் இருக்கும் இளம் தம்பதியர், ஐ-போன் வாங்க தங்களது பெண் குழந்தையை விற்றது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அந்த தமபதியினர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த தம்பதியினர் தகளுடைய மூன்று வயதே ஆன குழந்தையை இன்டர்நெட் விளம்பரம் செய்து ஆன்லைன் மூலமாக விற்றதாகவும், ஐ-போன், விலை உயர்ந்த காலணிகள் மற்றும் பிற நவீன பொருட்கள் வாங்க அந்த பணத்தை உபயோகப்படுத்தியதாகவும், சீன உள்ளூர் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது.

எனினும், அந்த தம்பதியர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இந்த பொருட்களை வாங்குவதற்கு தங்களது குழந்தையை விற்கவில்லை என்றும், தாங்களுடைய குழந்தையை தங்கள் வளர்ப்பதை காட்டிலும் வாங்கியவர்களால் நல்ல செழுமையாக வளர்க்க முடியும் என்பதால் மட்டுமே விற்றோம் என கூறுகிறார்கள்.

அவர்கள் அந்த குழந்தையை என்ன விலைக்கு விற்றார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும், அவர்களுடைய இணையதள தகவல் பரிமாற்றத்தில், 30 ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் யான் என பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Chinese couple ‘sold their baby daughter to buy an iPhone’

A young Chinese couple are facing many years in jail after allegedly selling their baby daughter to raise money for an iPhone and other luxury goods.

Related posts