நியூயார்க்கில் கடைக்கு வந்த 17 வயது இளம்பெண் கைப்பையில் சிசுவின் உடல்

Girls stopped for shoplifting in NY had human fetus in bag

Girls stopped for shoplifting in NY had human fetus in bag

‘விக்டோரியாஸ் சீக்ரெட்’ அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிரபல மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு உள்ளாடைக் கடை. அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி இது என்பதால் ஜோப்படி திருடர்களை கண்காணிக்க தனி காவலர்கள் பணியில் இருந்து வந்தனர்.

சுமார் 17 வயதுடைய இரண்டு இளம் மங்கையர்கள் நேற்று மதியம் இந்தக் கடையில் துணிகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களில் அருகில் செல்லும் போது தூர்நாற்றம் வருவதை கண்ட காவலர்கள், சந்தேகமடைந்து அவர்களது கைப்பைகளை வாங்கி சோதனை செய்தனர். அதில் ஒரு பெண்ணினுடைய பையில் ஒரு பச்சிளம் சிசு இறந்து அமுக்கி வைத்திருந்ததை கண்டு அதிர்ந்துபோன அவர்கள் காவல்துறையினரை அழைத்தார்கள். சிசுவை அந்த பெண்களில் ஒருவர், ஒரு நாளைக்கு முன் பிரசவித்ததாகவும், அதை என்ன செய்வது என தெரியாமல் இப்படி கைபயில் வைத்து தூக்கிக்கொண்டு செல்வதாகவும் கூறியிருக்கிறார்.
அந்தக் குழந்தை பிறந்து உயிருடன் இருந்ததா? என்ற விபரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தங்களுடைய இல்லத்து தொலைபேசி எண் என்று அந்த பெண் கொடுத்த எண்ணில் தொடர்பு கொண்டபோது அந்த எண்ணுக்குரியவர்களிடமிருந்து இது பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது. அந்த பெண்ணின் தோழி கொடுத்த வீட்டு முகவரியில் தொலைபேசி எண் கொடுக்கப்படவில்லை. இந்த 2 பெண்களும் திருடி களவாடப்பட்ட சொத்தினை தகாதமுறையில் வைத்திருந்ததாக குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தையை பிரசவித்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் பையில் இருந்த சிசுவின் உடல் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இறப்பிற்கு உண்டான காரணம் தெரிந்தபின் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நியூயார்க் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Girls stopped for shoplifting in NY had human fetus in bag

A dead baby found in a teenage girl’s shopping bag at a lingerie store was born alive and then asphyxiated, police said Friday, as the macabre discovery turned toward a possible homicide case.

Related posts