சென்னை:கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி சோழிங்கநல்லூரில் நடைபெற்ற திருமண விழாவில் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் ஸ்டாலின் நாளை ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த அவதூறு வழக்கிற்கு தடை விதிக்க கோரி மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அரசு வழக்கறிஞர் வழக்கு தொடர முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.
மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை – சென்னை உயர்நீதிமன்றம்
