Huge Asteroid Will hit Earth in 2032 Claim Astronomers
வருகிற 2032 ஆம் ஆண்டு பூமியை ராட்ஷச விண்கல் ஒன்று தாக்கும் என்றும், இதனால் உலகம் அழிய கூடிய ஆபத்து இருப்பதாகவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.
விண்வெளியில் ஆங்கங்கே மிதக்கும் சில விண்கற்கள் பூமியை நோக்கி பயணம் செய்கின்றன. இது போன்ற பெரும்பாலான விண்கற்கள் பூமியை நெருங்கும் முன்பே வெடித்துவிடும். மேலும் சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவில் விழுந்த விண்கல்லால் பாதிப்பும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2032-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஒரு ராட்ஷச விண்கல் பூமியை தாக்க கூடிய ஆபத்து இருப்பதாகவும், சுமார் 1345 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் பூமியில் மோதினால் உலகம் முற்றிலும் அழிய கூடிய ஆபத்து இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல் பூமியின் மீது மோதினால் மிக மிக சக்தியை கொண்ட அணுகுண்டு வெடித்து சிதறினால் ஏற்படக்கூடிய பாதிப்பை காட்டிலும், இது சுமார் 50 மடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. 2013 டி.வி 135 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் பற்றிய தகவல்களை இங்கிலாந்து, இத்தாலி, ரஷ்யா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகளும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். எனினும், பூமியை நோக்கி வேகமாக பயணித்து வரும் இந்த ராட்ஷச விண்கல் பூமியை தாக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என நாசா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.