நடிகர் சூர்யா ஆர்வத்துடன் முன்வந்து நடித்த விழிப்புணர்வு திரைப்படம்

safety while bursting crackers surya advise people about awareness

surya advise people about safety while bursting crackers

நடிகர் சூர்யா, தீபாவளி பட்டாசு விபத்து நடவாமல் தடுப்பதற்கு ஒரு விழிப்புணர்வு படத்தில் நடித்துள்ளார். தமிழ்நாடு தீயணைப்பு துறை, இந்த விழிப்புணர்வு படத்தை வெளியிடஇருக்கிறது. கடந்த ஒரு வார காலமாக,  தீயணைப்பு துறையினர், தீபாவளி பண்டிகையின்போது ஏற்படக்கூடிய பட்டாசு விபத்துகளை தடுத்திட சென்னையின் பல பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வர்கிறார்கள். அத்துடன் விழிப்புணர்வு ஒத்திகையும் நடத்தி முன்னோட்டமாக காண்பித்து வருகின்றனர். இந்த நிலையில்  விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்று நடத்த சென்னை தி. நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே தீயணைப்பு துறையினர், ஒரு விழிப்புணர்வை படத்தை நடிகர் சூர்யாவை வைத்து தயாரித்துள்ளனர். 2 நிமிடங்களே ஓடும் இந்த விழிப்புணர்வு குறும் படத்தில் நடிகர் சூர்யா பொது மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார். இந்த குறும் படத்திற்கு பின்னணி இசையை சேர்க்கும் வேலை நடந்து வருகிறது. அவ்வேலை முடிந்த பிறகு படத்தை பத்திரிக்கை துறையை சார்ந்தவர்களுக்கு முதலில் வெளியிட்டு போட்டு காட்டிவிட்டு பின்னர் திரையரங்குகளில் வெளியிட்டு, சின்ன திரைகளிலும் வெளியிடவும் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தீயணைப்புத்துறை இயக்குனர் ஆர்.சி.குடவாலா கூறியிருக்கிறார். இந்த குறும் படத்தில் நடிகர் சூர்யா ஆர்வத்துடன் தானே முன்வந்து நடித்ததுடன் அதற்குண்டான சம்பளம் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

safety while bursting crackers surya advise people about awareness

Fire department has roped in actor Suriya to act in a shortfilm creating awareness among people about the cracker accidents ahead of diwali.

Related posts