18-Year-Old Girl Forced to Drink Acid by Stalker in Mumbai; Victim Battling for Life
18 வயது கல்லூரி மாணவியை மும்பை கோரா கடற்கரை பகுதில் பின் தொடர்ந்து வந்த ஒரு வாலிபர், அவரை வலுகட்டாயமாக ஆசிட் குடிக்க வைத்து கடலுக்குள் தள்ளிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் இருக்கும் தாஹிசார் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவியை அந்த பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திரா(வயது 20) என்பவன் கடந்த பல மாதங்களாக பின் தொடர்ந்து வந்திருக்கிறான். இதனையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஜிதேந்திரா மீது காவல்துறையினரிடம் புகார் ஒன்றை கொடுத்தனர். காவல் துறையினர் அவரை அழைத்து எச்சரித்துவிட்டு அனுப்பி வைத்தார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு ஜிதேந்திரா அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி வலுகட்டாயமாக ஆசிட்டை வில் ஊற்றி குடிக்க வைத்து பின்னர் அவரை கோராய் கடற்கரையில் கடலுக்குள் தள்ளி விட்டுள்ளான்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த இளம் பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனிடையே இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஜிதேந்திராவை கைது செய்தனர்.
18-Year-Old Girl Forced to Drink Acid by Stalker in Mumbai; Victim Battling for Life
In a shocking incident, an 18-year-old college girl was forced to drink acid by her stalker. The accused later pushed the girl into the sea.