roman catholic festival : 30 people were dead at Nigeria in a roman catholic festival stampede
நைஜீரியாவினுடைய மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் நிக்போர் நகரில் டொமினிக் கத்தோலிக கிறிஸ்தவ பாதிரியார்கள் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
ஏராளமானவர்கள் கத்தோலிக கிறிஸ்தவ தேவாலயத்தில் இரவு முழுவதும் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 5 மணி) அனம்பரா மாகாண கவர்னர் விழாவில் பங்கேற்க அங்கு வந்தார். அப்பொழுது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது.
அந்த நெரிசலில் சிக்கி 17 பேர் இறந்தனர். 50-க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தார்கள். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
மேலும் பலியானோர் எண்ணிக்கை உயர வாய்ப்பு உண்டு என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியானதாக புதிய நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.