சிதம்பரம் அருகே காதலியை சந்திக்க சென்ற வாலிபர் அடித்துக்கொலை

Young man killed near chidambaram while going to meet his lover near her residence to receive the gift for the occasion of Diwali near Chidambaram

Young man killed near chidambaram while going to meet his lover near her residence to receive the gift for the occasion of Diwali near Chidambaram -  சிதம்பரம் அருகே காதலியை சந்திக்க சென்ற வாலிபர் அடித்துக்கொலை

சிதம்பரம் அருகில் நள்ளிரவு நேரத்தில் பெண் தோழியை காண சென்ற வாலிபர் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக 3 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஒரு குற்றவாளியை தேடிவருகிறார்கள்.

தீபாவளியன்று தனது காதலி பரிசு ஒன்று தருவதாக கூறியதையொட்டி போன வாலிபர் படுகொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டதில் உள்ள சிதம்பரம் இடைத்தெருவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன்(22). இவருக்கு, சிதம்பரம் பெரியார் தெருவில் உள்ள கல்லூரி மாணவி ஒருவருடன் நட்பு மற்றும் காதல் இருந்தது. நேற்று தீபாவளி பண்டிகை என்பதால்  ஸ்ரீனிவாசனை பரிசு பொருள் ஒன்று கொடுப்பதற்காக காதலி செல்போனில் தொடர்பு கொண்டு இரவு 11.30 மணிக்கு தனது வீட்டுக்கு அருகில் வருமாறு அழைத்துள்ளார். இதைத்தொடர்ந்து காதலர் ஸ்ரீனிவாசன், தன் நண்பன் கோபியுடன் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றார்.

காதலியின் வீட்டுக்கு அருகில் சென்ற போது அவரது காதலியின் உறவினர்கள் பார்த்திபன் மற்றும் அவரது சகோதரர் மணிகண்டன் ஆகியவர்கள் பட்டாசு வெடித்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஸ்ரீனிவாசனை கண்டதும் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த அவர்கள், இந்த இரவு நேரத்தில் இங்கு என்ன வேலை என்று கேட்டு தகராறு செய்தனர். இதில் இவர்களுக்கு இடையில் தகராறு ஆனது. அங்கு ஏற்பட்ட சண்டையில் காதலியின் உறவினர்களான இரண்டு பேரும் சீனிவாசனையும், அவரது நண்பர் கோபியையும் உருட்டுக்கட்டையால் அடித்து விரட்டியுள்ளனர்.

இந்த தாக்குதலில் கோபியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதால் ஸ்ரீனிவாசன் உடனே ஆட்டோ ஒன்றை பிடித்து நண்பர் கோபியை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அதன் பின் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல மீண்டும் தன் காதலி வீடு அருகில் சென்ற போது அங்கு நின்றுகொண்டிருந்த பார்த்திபன், மணிகண்டன் மற்றும் அதே பகுதியில் உள்ள ராஜீ மற்றும் ரங்கநாதன் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு ஸ்ரீனிவாசனை மீண்டும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினார்கள். இந்த தாக்குதலில் படுகாயமுற்ற ஸ்ரீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்த கொலை குறித்த தகவலின் பேரில் சிதம்பரம் டவுன் காவல் கண்காணிப்பாளர் முருகானந்தம் மற்றும் காவல்துறையை சார்தவர்கள் கொலை நடந்த இடத்துக்கு விரைந்து சென்று சீனிவாசனுடைய உடலை மீட்டனர். பீன்னர் ஸ்ரீனிவாசனின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்து ஸ்ரீனிவாசனை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த அவருடைய காதலியின் உறவினர் பார்த்திபன் மற்றும் ராஜீ, ரங்கநாதன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள மணிகண்டனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Young man killed near chidambaram while going to meet his lover near her residence to receive the gift for the occasion of Diwali near Chidambaram

Related posts