தமிழகத்தில் "டாஸ்மாக்' களை அகற்ற கோரி பிச்சையெடுத்து தமிழக அரசுக்கு அனுப்பும் போராட்டம் நடத்திய காந்தியவாதி கைது

Tasmac Government owned liquor shop : Gandhian Mr.Sasiperumal arrested for protesting against Tasmac Government owned liquor shop . He insisted tamilnadu government to prohibit alcohol and close down all Tasmac Government owned liquor shops in tamilnadu. Mr.Sasiperumal demonstrated a begging in front of a Tasmac Government owned liquor shop with a Mud Bowl in ‘Edappadi’

இடைப்பாடி: தமிழ்நாடு முழுவதும் உள்ள ‘டாஸ்மாக்’ அரசு மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டம் செய்த காந்தியவாதி திரு.சசிபெருமாளை, காவல்துறையினர் கைது செய்து, பின்னர் மாலையில் அவரை விடுவித்தார்கள்.

Tasmac Government owned liquor shop : Gandhian Mr.Sasiperumal arrested for protesting against Tasmac Government owned liquor shop - காந்தியவாதி திரு.சசிபெருமாள்
காந்தியவாதி திரு.சசிபெருமாள் – File

தமிழ்நாட்டில் இயங்கி வரும் ‘டாஸ்மாக்’ மதுபான அரசு விற்பனை கூடங்களை முழுவதுமாக அக்ற்ற வேண்டும் என்று கூறி, காந்தியவாதி திரு.சசிபெருமாள், தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை செய்து வருகிறார்.

தமிழ்நாட்டில் இருக்கும் ‘டாஸ்மாக்’ அரசு மதுபான கடைகளை மூடிவிட்டால், தமிழக அரசுக்கு வருமானம இழப்பு உண்டாகும் என்பதற்கு, பிச்சை எடுத்து, அந்த பிச்சை மூலம் சேரும் தொகையை, காந்தியவாதி திரு.சசிபெருமாள், தமிழ் நாடு அரசுக்கு அனுப்பிவைத்து புது வகை போராட்டத்தை நடத்தி வருகிறார்.
நேற்று, இளம்பிள்ளையில் பிச்சை எடுத்து, தமிழ்நாடு அரசுக்கு நிதி கொடுக்கும் போராட்டம் ஒன்றை துவக்கினார். இளம்பிள்ளையில் இருக்கும் மோட்டூர் பகுதிகளில், அரசு மதுபான ‘டாஸ்மாக்’ கடைக்கு முன்னால் ஒரு மண்சட்டியை ஏந்தி, பிச்சை எடுத்து சில்லறை வாங்கும் போராட்டத்தை திரு.சசிபெருமாளும், அவருடைய ஆதரவாளர்களும் நடத்தினார்கள்.

இந்த பிச்சை போராட்ட தகவல் தகவலறிந்த மகுடஞ்சாவடி காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், சங்ககிரி காவல் கண்காணிப்பாளர் வேலுதேவன், துணை காவல் கண்காணிப்பாளர் (எஸ்.ஐ) கந்தசாமி ஆகியோர், காந்தியவாதி திரு.சசிபெருமாளையும், அவருடைய ஆதரவாளர்களையும் கைது செய்தார்கள். அதற்கு பின், மாலையில் எல்லோரையும் விடுவித்தார்கள்.

Related posts