ஆன்லைன் வகுப்புக்களில் விதிமுறைகள் மீறப்படுகிறதா? அதை கண்காணிக்க அமைப்பு உருவாக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதி மன்றம் ஆலோசனை
சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை பள்ளிகள் பின்பற்றுகின்றனவா என கண்காணிக்கப்பதர்க்கு ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தனியார் பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை எப்படி பின்பற்றப்படுகிறது?
மலைப்பகுதி மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்கப் போகிறார்கள்? தனியார் பள்ளிகள் முன்கூட்டியே பதிவு செய்து வகுப்புகளை நடத்துகிறார்களா? என்பது தொடர்பாக கேள்விகளை உயர் நீதிமன்றம் நீதி அரசர்கள் எழுப்பியிருந்தனர்.
இந்த வழக்குகள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞர், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் அமல்படுத்துவது சம்பந்தமாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிரான புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவர்களின் நலன் அனைவரின் பொறுப்பாகும். ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை பள்ளிகள் பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.
மாணவர்கள் ஆபாச இணையதளங்களுக்குள் நுழைய முடியாதபடி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்கள்.
இதையும் படியுங்கள்
- சென்னையில் தொழில்வரி, சொத்துவரி, செலுத்த செப். 30 வரை அவகாசம்
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்ட நீதிமன்றங்களில் செப் 7-ம் தேதி முதல் நேரடி விசாரணை
- நேரடி விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு கவுன் அணிவதிலிருந்து விலக்கு: மும்பை உயர்நீதிமன்றம்
- ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு ஆண்டுக்கு 40 நாள் சாதாரண விடுப்பு: இரண்டு தவணைகள், ஓராண்டு விதி எப்படிச் செயல்படும்? உயர் நீதிமன்றம் விளக்கம்
- தனியார் பள்ளி, கல்லூரி, வேலையளிப்போர் விண்ணப்பங்களில் சாதி விவரம் கட்டாயமா? சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
- லஞ்சம் கேட்பது அரசுப் பணியின் ஒரு பகுதியா? ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17A பாதுகாப்பு கிடையாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்
- கைதுக்கான காரணங்களை எழுத்தில் தராவிட்டால் என்ன ஆகும்? சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது, உங்கள் உரிமைகள்
← முந்தைய செய்தி: நேரடி விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு கவுன் அணிவதிலிருந்து விலக்கு: மும்பை உயர்நீதிமன்றம்
அடுத்த செய்தி →: சென்னையில் தொழில்வரி, சொத்துவரி, செலுத்த செப். 30 வரை அவகாசம்

