கர்நாடக சட்டப்பேரவை தலைவர் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூற முடியாது – உச்சநீதிமன்றம்

டெல்லி:ஆளும் கர்நாடக காங்கிரஸ் – மஜத எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் விலகல் கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமாருக்கு அனுப்பினர். ஆனால் அவர் விலகல் கடிதம் சமந்தமாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. சட்டப்பேரவைத் தலைவர் முடிவு எடுக்காத காரணத்தால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.சட்டப்பேரவைத் தலைவர் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் கூற முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்தார். “எந்த அடிப்படையில் சட்டப்பேரவைத் தலைவர் முடிவு எடுக்கிறார்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Related posts