Today Mother Teresa 103rd birthday
அன்னை தெரசா யூகோஸ்லோவியாவில் உள்ள ஸ்கோப்ஜி நகரத்தில் 26-08- 1910 ஆம் தேதி பிறந்தார் இவரத இயற்பெயர் ஆக்னஸ் கோஞ்செ பொயாஜியூ.அன்னை தெரசாவின் செல்லப்பெயர் கோன்ஸா. தந்தையின் பெயர் நிகோலா பொயாஜியூ . தாயின் பெயர் திரானி பெர்னாய். உடன் பிறந்தவர்கள் அக்கா அகா மற்றும் அண்ணன் லாஸர்.
அன்னை தெரசா தனது ஐந்து வயதிலேயே அனைத்து பாடங்களையும் நுனி நாக்கிலேயே வைத்திருப்பார். அவரது பாடல்கள் மற்றும் பாடங்களைப் பற்றிய பேச்சு மடை திறந்த வெள்ளம் போல் காணப்படும். படிப்பு தவிர நகைச்சுவை உணர்வும் மிக அதிகமாக இருந்தது. இதனாலேயே எல்லோருடைய கவனத்தையும் எளிதில் வசீகரித்து விட்டார்.
1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார். 1970 ஆம் ஆண்டுக்குள் இவரை சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார்.
இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால்பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.
Today Mother Teresa 103rd birthday
Advertisement: CHENNAI REAL ESTATE
Real estate chennai properties : Flats, Independent houses, industrial shed, Plots, land, CMDA and DTCP approved Buying and selling – http://www.bestsquarefeet.com/
Industrial property for sale in Chennai